நரேஷ்
பட்டினம்பாக்கம் கிரவுண்ட் பரபரத்துக்கொண்டிருந்தது. புது ஆடைகளை கண்டிராத ஒரு குழந்தை புத்தாடை அணிந்து குதூகளிப்பதைப்போல, தனது புணரமைக்கப்பட்ட புது உடலில் விளையாட வந்திருந்தவர்களை ஆடையாக அணிந்து கொண்டாடிக்கொண்டிருந்தது அந்த கிரவுண்ட். ஆடைக்கு அணிகலன்கள் போல மேடைகளாலும், ‘கோப்பை’களாலும் அரங்கம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதுவரை நடந்திராத ஒரு நிகழ்வு அங்கு அரங்கேறுவதைப்போன்ற உணர்வில் உறைந்திருந்தார்கள் பார்வையாளர்கள்.
இடம்: பட்டினம்பாக்கம் கிரவுண்ட்.
டீம்: நொச்சிக்குப்பம் vs பட்டினம்பாக்கம்
ஓவர்கள்: 6
வெல்லப்போவது யார்? ஆட்ட நாயகன் விருது யாருக்கு? சிறந்த பேட்ஸ்மேன் விருது யாருக்கு? என்று பல தெரியாத தகவல்களுக்கான ஆவலுடன் ஆரம்பமானது ஆட்டம். ஆட்டம் தொடங்கியதிலிருந்து அணியின் ஒவ்வொரு வீரரும் அக்கறையுடன் கண்காணிக்கப்பட்டனர். அவர்களுக்கான முதலுதவி, சத்து பாணங்கள், தண்ணீர் என்று அனைத்து வசதிகளும் அமைக்கப்பட்டிருந்தது. விளையாட்டைத் தவிர வேறெந்த கவலையோ, யோசனையோ அவர்களுக்கு ஏற்படாத வண்ணம் ஒருங்கிணைப்பாளர்கள் செயல்பட்டனர். திசைதிருப்பும் காரணிகள் இல்லாமல் விளையாடினால் வெளிப்படும் அவர்களது முழுத் திறமையை கண்டுபிடித்திட வேண்டும் என்ற குறிக்கோளை நோக்கியே வருண் அறக்கட்டளை செயல்பட்டது. டாஸ் சடங்கு முடிந்தபிறகு களமிறங்கியது நொச்சிக்குப்பம் அணி. ஆரம்பத்திலிருந்தே அதிரடி ஆட்டம் ஆடியவர்கள், பொறுமையாகவே விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஆறு ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு ஐம்பத்தி ஐந்து ரன்கள் எடுத்து முதல் இன்னிங்க்ஸை முடித்துவைத்தனர் நொச்சிக்குப்பம் அணியினர்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை டி.வி.யில் கண்டுகளித்த பலர், தங்கள் மகன் விளையாடும் விளையாட்டைக் காண முதல் முறையாக வந்திருந்தனர். 6 ஓவருக்கு 55 ரன்கள் என்பது குறைவான ஸ்கோராக பார்க்கப்பட்டது. காரணம், சென்னையின் ஸ்ட்ரீட் கிரிக்கெட்டைப் பற்றி அவர்கள் அறிந்திருக்காதது. இடைவேளையில் இளைப்பாறிவிட்டு, வேண்டிய வியூகங்கள் வகுத்துவிட்டு, குளிர் பானங்கள் குடித்துவிட்டு, ஒருமுறை பிட்ச்-ஐ பதம் பார்த்துவிட்டு, வித்தைகள் பலவற்றை பரிசீலித்துவிட்டு என்று இடையறாது முயன்றுவிட்டு முன்வந்து நின்றனர் இரு அணியினர். காலம் கறாராக கடைப்பிடிக்கப்படுவது ஒரு முழுமையான உணர்வுடனும் ஒழுங்குடனும் விளையாட வழிவகுக்கும் என வருண் அறக்கட்டளையினர் நம்பியது வீண் போகவில்லை.
ஒவ்வொரு முறை இரு அணியினரும் எதிர்கொள்ளும்போது, அங்கிருந்த அனைவரும் எதிர்பார்த்த மிக முக்கியமான விஷயம்- சண்டை! ஏனென்றால், இந்தப் பகுதிகளில் சண்டை இல்லாமல் மேட்ச் நடந்ததாக சரித்திரமே இல்லை. அதுவும்பட்டினம்பாக்கத்தினர் பேட்டிங் செய்யும்போது ஏதேனும் விக்கெட் விழுந்தால், அவர்களைச் சேர்ந்தவர்கள் என்ன சச்சரவு செய்யப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புதான் எடுக்கப்படும் ரன்களைவிடவும் அதிகமாக இருந்தது. அப்படியான சச்சரவுகள் ஏதும் நிகழாமல் இருக்க, அங்கே அரசியலைத் தாண்டிய அன்பு தேவை; போட்டியின் வேகத்தைத் தாண்டிய பொறுமை தேவை; ஆனால், வருண் அறக்கட்டளையோ அனுபவம் ஏதுமின்றி முதல்முறையாக இறங்கியிருக்கும் களம் அது.
பட்டினம்பாக்கம் கிரவுண்ட், அணியினரை புத்தாடையாக அணிந்திருந்ததைப்போல, அவர்களின் நம்பிக்கையை ஆடையாக அணிந்து நின்றது வருண் அறக்கட்டளை. அந்த நம்பிக்கை நின்றதா? வரிந்து கட்டிவரும் சண்டையை வராமல் தடுக்க முடிந்ததா? வருண் அறக்கட்டளையால் தங்கள் வார்த்தையை காப்பாற்ற முடிந்ததா?
(முன்னேற்றம் தொடரும்…)
**விளம்பரக் கட்டுரை**
[நெஞ்சே எழு: அணியின் தோல்வியல்ல; மண்ணின் வெற்றி!](www.minnambalam.com/k/2019/06/10/15)
**
மேலும் படிக்க
**
**
[கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி](https://minnambalam.com/k/2019/06/10/46)
**
**
[டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்கள் பலம்: அதிமுகவில் மோதிக்கொள்ளும் மா.செ.க்கள்!](https://minnambalam.com/k/2019/06/10/66)
**
**
[முகிலன் இருக்கிறார்!](https://minnambalam.com/k/2019/06/10/20)
**
**
[மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு](https://minnambalam.com/k/2019/06/09/52)
**
**
[செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!](https://minnambalam.com/k/2019/06/09/36)
**
�,”