அமலா பால் நடித்துள்ள ஆடை படத்தின் டீசர் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ளது.
மேயாத மான் திரைப்படத்தை இயக்கிய ரத்ன குமாரின் இயக்கத்தில் அமலா பால் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆடை திரைப்படத்தின் டீசர் வெளியாகி விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ‘ஆடை’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த நிலையில் ஆடை திரைப்படத்தின் அதிகாரபூர்வ டீசர் பாலிவுட்டின் பிரபல இயக்குநரான கரண் ஜோஹரால் ஜூன் 18ஆம் தேதி மாலை 4 மணிக்கு அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது.
ஆடை எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட திரைப்படமாக அமையும் என்பதை அதன் டீசர் உணர்த்தியுள்ளது. தணிக்கை குழுவால் ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தில் சவாலான, துணிச்சல்மிக்க காட்சிகளில் அமலா பால் நடித்துள்ளார். வி ஸ்டூடியோஸின் பேனரில் விஜி சுப்ரமணியன் தயாரித்துள்ள இந்தத் திரைப்படத்தில் காமினி என்னும் கதாபாத்திரத்தில் அமலா பால் நடித்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டான ராட்சசன் திரைப்படத்தைத் தொடர்ந்து தற்போது இந்தப் படத்தில் அவர் நடித்துள்ளார்.
விஜய் கார்த்திக் கண்ணா ஒளிப்பதிவு செய்யும் இந்தத் திரைப்படத்துக்கு பிரதீப் குமார் இசையமைக்கிறார். ஹீரோயினை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இதில் சில காட்சிகளில் அமலா பால் ஆடையின்றி நடித்துள்ளார். டீசரில் இடம் பெறும் அந்தக் காட்சிகள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தபோதே பலரின் பாராட்டுகளைப் பெற்றிருந்த அமலா பாலுக்கு, ஆடை திரைப்பட டீசர் வெளியானதிலிருந்து திரைத்துறையினர் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். ஆடை திரைப்படத்தைத் தொடர்ந்து ‘அதோ அந்த பறவை போல’ திரைப்படத்திலும் சில மலையாளப் படங்களிலும் அவர் நடித்துவருகிறார்.
[ஆடை டீசர்](https://youtu.be/gd6E2XgRoww)
**
மேலும் படிக்க
**
**[ராசா பதவியேற்பு: சம்பவம் அல்ல, சரித்திரம்!](https://minnambalam.com/k/2019/06/18/51)**
**[டிஜிட்டல் திண்ணை: அன்புமணிக்கு ராஜ்யசபா இல்லை: உடைகிறது அதிமுக-பாமக கூட்டணி?](https://minnambalam.com/k/2019/06/18/90)**
**[வாழ்க பெரியார், வந்தே மாதரம்: தமிழக எம்.பி.க்கள் பதவியேற்பு சுவாரசியங்கள்!](https://minnambalam.com/k/2019/06/18/59)**
**[ரஞ்சித் குடும்பப் புகைப்படம்: ஹெச்.ராஜா மீது டிஜிபியிடம் புகார்!](https://minnambalam.com/k/2019/06/18/29)**
**[உதயநிதிக்கு வழிவிடுகிறாரா வெள்ளக்கோயில் சாமிநாதன்?](https://minnambalam.com/k/2019/06/17/69)**
�,”