Pநாமக்கல்: 260 குழந்தைகளின் நிலை?

Published On:

| By Balaji

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் பிறந்த 260 குழந்தைகளின் விவரங்கள் தெரியாததால் அக்குழந்தைகள் விற்கப்பட்டனவா என்ற கோணத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த மார்ச் 25ஆம் தேதி குழந்தைகள் விற்பனை தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாமக்கல்லில் குழந்தைகள் பிறப்பு சான்றிதழ்களுடன் விற்கப்படுவது இந்த ஆடியோ மூலம் தெரியவந்தது. இவ்விவகாரத்தில் ஓய்வு பெற்ற செவிலியர் அமுதவல்லி உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கை கையில் எடுத்துள்ள சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ராசிபுரம், கொல்லிமலை பகுதிகளில் பிறந்த குழந்தைகளின் விவரம், மற்றும் குழந்தைகள் இல்லாத பெற்றோர்களின் விவரத்தை சேகரித்து விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அடுத்தடுத்து பலர் கைதாகி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட பெங்களூரை சேர்ந்த ரேகா என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். இவர் 18க்கும் மேற்பட்ட குழந்தைகளை விற்பனை செய்தது, விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

இதற்கிடையில், கடந்த 4 ஆண்டுகளில் நாமக்கல் மாவட்டத்தில் 4,300 குழந்தைகள் பிறந்திருப்பதும், அதில் 260 குழந்தைகளின் நிலை என்ன என்பது தெரியவில்லை எனவும், சிபிசிஐடி போலீசாரிடம் நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிக்கை கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த 260 குழந்தைகள், அவர்களின் நிலை என்ன, இடைத்தரகர்களால் விற்கப்பட்டனவா போன்று பல்வேறு கோணத்தில் விசாரணையைத் துரிதப்படுத்தியுள்ளனர்.

.

.

**

மேலும் படிக்க

**

.

**

[விமர்சனம்: மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/7)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: கெஞ்சல், மிரட்டல்- கமல் வெளியிடாத ரகசியத் தகவல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/84)

**

.

**

[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/53)

**

.

**

[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/27)

**

.

**

[இன அழிப்புப் போரில் இறந்தோருக்கு அஞ்சலி](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/24)

**

.

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share