முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சிறை பிடிக்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்களை 6 மாவட்ட போலிஸ் பாதுகாப்புடன் சந்திக்க செல்கிறார் என்ற தகவல் நேற்றிரவு வெளியானது. அதற்கு முன்னதாக நேற்று மதியம் சசிகலா அதிமுக எம்.எல்.ஏக்களை இரண்டாவது நாளாக மீண்டும் கூவத்தூர் சென்று சந்தித்து திரும்பினார். அதையடுத்து சசிகலா சகோதரர் திவாகரன் தனது ஆட்களுடன் சென்று கூவத்தூரில் இருக்கும் எம்.எல்.ஏக்களை ஓ.பன்னீர்செல்வத்துடன் செல்லாமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தார். இதையடுத்து நள்ளிரவில் எம்.எல்.ஏக்களை சந்திக்க செல்கிறீர்களா என முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடம் செய்தியாளர்கள் கேட்ட போது அங்கே அசாதாரண சூழல் நிலவுகிறது அதனால் நான் செல்லவில்லை என்றும், நாளை கோட்டைக்கு சென்று எனது முதல்வர் பணியை தொடர்வேன் என்றும் தெரிவித்தார். ஓ.பன்னீர் கேட்கும் கோப்புகளை அதிகாரிகள் தருவார்களா? என்பது கேள்விக்குறி தான்.�,
pநள்ளிரவில் பன்னீர் ஏற்படுத்திய பரபரப்பு!
+1
+1
+1
+1
+1
+1
+1