சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் சட்ட மசோதா, மாநிலங்களவையில் 2010ஆம் ஆண்டிலேயே நிறைவேற்றப்பட்ட போதிலும், மக்களவையில் நிறைவேற்றப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. எனினும் அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியில் உள்ள பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் 17ஆவது மக்களவைத் தேர்தலின் முடிவில் 76 பெண் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இது 542 தொகுதிகளில் 14 சதவிகிதமாகும். கடந்த மக்களவைத் தேர்தலில் 66 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இந்த தேர்தலில் 76 பேர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து அதிகபட்சமாக தலா 11 பெண் வேட்பாளர்கள் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த மாநிலங்களைத் தொடர்ந்து ஒடிசா மாநிலத்தின் பிஜூ ஜனதா தள கட்சியின் சார்பில் 6 பெண் வேட்பாளர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.
பாஜக சார்பில் களமிறக்கப்பட்ட 47 வேட்பாளர்களில் 34 பேர் வெற்றி பெற்றுள்ளனர். ஏற்கனவே செல்வாக்குள்ள மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோரும் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாகப் போட்டியிட்ட தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் கனிமொழி ஆகிய இருவரும் வெற்றி பெற்றுள்ளார்கள். காங்கிரஸ் சார்பில் ஜோதிமணி வெற்றிபெற்றுள்ளார். பகுஜன் சமாஜ் களமிறக்கிய 24 பேரில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். சுயேச்சையாக போட்டியிட்ட 222 வேட்பாளர்களில் ஒருவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.கர்நாடகாவில் மாண்டியா தொகுதியில் போட்டியிட்ட நடிகை சுமலதா அம்பரீஷ் , மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
1952 முதல் நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தல் வரலாற்றிலேயே அதிக பெண் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்தல் இதுவாகும்.
.
.
**
மேலும் படிக்க
**
.
.
**
[பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராவார்: தங்க தமிழ்ச்செல்வன்](https://minnambalam.com/k/2019/05/24/58)
**
.
**
[திமுக மக்களவைக் குழுத் தலைவர் யார்?](https://minnambalam.com/k/2019/05/24/63)
**
.
. **
[ராஜ்யசபா: அன்புமணியின் அடுத்த மூவ்!](https://minnambalam.com/k/2019/05/24/9)
**
.
**
[திமுக எம்.பி.க்களின் ரகசிய புலம்பல்!](https://minnambalam.com/k/2019/05/24/30)
**
.
**
[அமேதியில் ராகுல் வீழ்ந்த பின்னணி!](https://minnambalam.com/k/2019/05/24/33)
**
.
.
�,”