pதிறந்தவெளிகளில் தொழுகை வேண்டாம்: டி.ஜி.பி!

public

ஜம்மு-காஷ்மீரில் மசூதி அருகே போலீஸ் டி.எஸ்.பி. அடித்துக் கொல்லப்பட்ட சூழ்நிலையில், காவல்துறையினர் திறந்தவெளிகளில் ரம்ஜான் தொழுகை செய்ய வேண்டாம் என்று ஜம்மு காஷ்மீர் போலீஸ் டி.ஜி.பி. தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகர், நவ்ஹாட் என்ற பகுதியில் உள்ள ஜாமியா மசூதியில் பாதுகாப்பு பணிகளைச் செய்துவந்த போலீஸ் டி.எஸ்.பி. முகமத் அயூப் என்பவரை 200 பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கியது. அதையடுத்து, அந்தக் கும்பலிடம் இருந்து தற்காத்து கொள்வதற்காக டி.எஸ்.பி. முகமத் அயூப் துப்பாக்கியால் சுட்டதில் மூன்று பேர் காயமடைந்தனர். அதனால், ஆத்திரமடைந்த கும்பல் டி.எஸ்.பி-யைத் தொடர்ந்து தாக்கியதில், சுயநினைவு இழந்த அவரை உடனடியாக அவசரச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

அதையடுத்து, கொலையுண்ட டி.எஸ்.பி-யின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய காஷ்மீர் முதல்வர் நேற்று ஜூன் 25ஆம் தேதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: “ஜம்மு-காஷ்மீர் போலீஸார் சகிப்புத்தன்மைக்குப் பெயர்பெற்றவர்கள். வீரம் மிக்கவர்களாக இருந்தாலும் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கும்போது தங்கள் மக்கள் என்பதை உணர்ந்து சகிப்புத்தன்மையை கடைப்பிடித்து வருகின்றனர். இந்நிலையில், போலீஸ் அதிகாரியைக் கும்பலாக பலர் சேர்ந்து தாக்கிக் கொன்ற சம்பவம் அவமானகரமானதாகும்.

போலீஸாரின் பொறுமையும், சகிப்புத்தன்மையும் எல்லை கடந்துபோனால் எதிர்விளைவு மிகவும் மோசமாக இருக்கும். போலீஸாரின் கடமையுணர்வை பற்றி நாம் புரிந்துகொள்ள இன்னும் காலம் உள்ளது என நான் நம்புகிறேன். காவல்துறை என்பது நம்மைப் பாதுகாக்கும் துறையாக நாம் நினைக்க வேண்டும். அவர்களை இப்படி நடத்துவது அவமானகரமானது என்பதை பொதுமக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

இந்நிலையில், போலீஸார்மீது தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என்று அஞ்சப்படுவதால், திறந்தவெளிகளில் ரம்ஜான் தொழுகை நடத்த வேண்டாம் என்று ஜம்மு-காஷ்மீர் டி.ஜி.பி. மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்குத் தனிமையாக உள்ள ஈத்கா திடல் மற்றும் ஒதுக்குப்புறமான இடங்களில் உள்ள மசூதிகளில் போலீஸார் ரம்ஜான் தொழுகையில் ஈடுபட வேண்டாம் என்று தகவல் அனுப்பி போலீஸாருக்குக் கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *