w
இப்போதெல்லாம் சாதாரண வொர்க் அவுட் சைக்கிள்களின் தொடக்க விலையே ரூ.15,000இல்தான் ஆரம்பிக்கிறது. ஆனால், ஜியோமி நிறுவனம் இந்திய ரூபாய் மதிப்பில் 30,000 ரூபாய்க்கே எலெக்ட்ரிக் சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு முன்பும் இதேபோன்ற ஒரு சைக்கிளை கடந்த மார்ச் மாதத்தில் வெளியிட்டிருந்தாலும் அது ப்ரீமியம் வெர்ஷன் ரூபாய் 2 லட்சத்துக்குப் பக்கத்தில் வரும். இதுவோ ‘மக்கள் எலெக்ட்ரிக் சைக்கிள்’. இந்த சைக்கிளில் உங்கள் மொபைல், ப்ளுடூத்டுடன் இணைக்கப்பட்டிருக்கும். சைக்கிளின் கைப்பிடிலுள்ள சென்சார் உங்கள் இதயத்துடிப்பை கணக்கெடுத்து எவ்வளவு கலோரிகளை எரிக்கிறீர்கள் என துல்லியமாக கணக்கிடும். 14.5 கிலோகிராம் எடையுள்ள இந்த சைக்கிளில் 20 பனோசானிக் நிறுவனத்தின் லித்தியம் பாட்டரிகள் உள்ளன. ஒருமுறை சார்ஜ் செய்தால் 45 கிலோ மீட்டர் ஓடும். இவை எல்லாவற்றையும் விட இதை நாலாக மடித்து கார் டிக்கியினுள் வைத்துவிடலாம். அவ்வளவு ஏன், முதுகில் மாட்டிக்கொண்டு வகுப்பறைக்கே போய்விடலாம். தற்போது சீனாவில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த சைக்கிள், விரைவில் உலகம் முழுவதும் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.�,