�அனைவரின் கையிலும் ஸ்மார்ட்போன்கள் வந்துவிட்ட நிலையில் பெரும்பாலான தேவைகளை அதிலேயே முடித்துக் கொள்கிறோம். இந்நிலையில் சுற்றுலாத் தளங்களை குறித்த விவரங்கள் வழங்கும் ‘பினாக்கின்’ என்ற அப்ளிக்கேஷனின் புரோமோட்டர்களுடன் தமிழ்நாடு சுற்றுலாத் துறை இணைந்துள்ளது.
2016ஆம் ஆண்டில் உருவான ‘பினாக்கின் ஆப்’ நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் iOS மொபைல்களில் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஆப், சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள சுற்றலா தளங்கள் குறித்த அனைத்துவிதமான தகவலையும் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் இது குறித்து தமிழ்நாடு சுற்றுலாத் துறை வெளியிட்ட அறிக்கையில், இந்த ‘பினாக்கின் ஆப்’ தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் கிடைக்கும். தமிழ்நாடு, இந்தியா மட்டுமின்றி உலகளவில் பல்வேறு சுற்றுலாத் தளங்கள் பற்றியும் அறிந்துகொள்ள உதவும். சுற்றுலாப் பயணிகள் இலவசமாக ‘பினாக்கின்’ ஆப்பினை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என்றும், அதில் தமிழகத்தின் பெரும்பாலான சுற்றுலாத் தளங்கள் குறித்த விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.�,