`பாகுபலி’ படத்தின் முதல் பாகம் பாக்ஸ் ஆபீஸில் ரூ.650 கோடி வசூலித்திருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள `பாகுபலி-2′, ரிலீசாகிய 10 நாட்களில் ரூ.1227 கோடியை எட்டியுள்ளது. இந்தியாவில் மட்டும் `பாகுபலி-2′-ன் வசூல் வேட்டை ரூ.850 கோடியை தாண்டி தொடர்கிறது.
நித்தேஷ் திவாரி இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான ‘தங்கல்’ படம் சீனா மொழியில் டப் செய்யப்பட்டு சமீபத்தில் வெளியானது. ஆசியாவின் பெரிய சினிமா வியாபார தலம் சீனா தான். நிறைய திரையரங்குகள் இன்னும் நல்ல பராமரிப்பில் உள்ளன. படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம்.வெளியாக 4 நாட்களில் சீனாவில் மட்டும் `தங்கல்’ ரூ.90.60 கோடியை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து இப்படத்தின் மொத்த வசூல் ரூ.803 கோடியாக உயர்ந்துள்ளது. விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுக்களைப் பெற்ற இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.375 கோடிகளை வசூலித்து இந்திய வசூலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.�,