கடந்த 25 ஆண்டுகளாக சிக்கிம் மாநிலத்தில் தொடர்ச்சியாக ஆட்சி செய்துவரும் முதல்வர் பவன்குமார் சாம்லிங் சாம்ராஜ்யம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
1993ஆம் ஆண்டு சிக்கிம் ஜனநாயக முன்னணி எனும் கட்சியை நிறுவினார் பவன்குமார் சாம்லிங். இதற்கடுத்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, அம்மாநிலத்தின் முதல்வரானார். அதன்பின் 1999, 2004ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் பெருவெற்றி பெற்றது சிக்கிம் ஜனநாயக முன்னணி. 2009ஆம் ஆண்டு நடந்த சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 32 தொகுதிகளிலும் அக்கட்சி வெற்றியடைந்தது. 2014ஆம் ஆண்டு தேர்தலின்போது 22 இடங்கள் பெற்று 5ஆவது முறையாக முதல்வரானார் பவன்குமார் சாம்லிங். இதன் மூலமாக, மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் ஜோதிபாசுவின் சாதனையை சமன் செய்தார்.
2016ஆம் ஆண்டு நடந்த தேர்தலின்போது அசாம் மாநிலத்தில் பாஜக வெற்றிபெற்ற பின்னர், வடகிழக்கு மாநிலங்களில் வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணி ஏற்படுத்தப்பட்டது. இதில் சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியும் இணைந்தது. ஆனால், தற்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக, அக்கட்சியுடன் கூட்டணி அமைக்கவில்லை. மாறாக, பிரேம்சிங் தமாங் தலைமையிலான சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா கட்சியுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்து தோல்வியுற்றது. இதனால், மொத்தமுள்ள 32 தொகுதிகளிலும் சிக்கிம் ஜனநாயக முன்னணி மற்றும் சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா ஆகியன தனித்துப் போட்டியிட்டன.
இதில், 17 இடங்கள் பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா. 15 இடங்களுடன் இரண்டாமிடம் பெற்றுள்ளது பவன்குமார் சாம்லிங்கின் சிக்கிம் ஜனநாயக முன்னணி. இதன் மூலமாக, அவரது 25 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. தேர்தல் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த சிக்கிம் ஜனநாயக முன்னணி செய்தித் தொடர்பாளர் கே.டி.கியால்ட்சென், இத்தனை ஆண்டு காலம் இந்த மாநிலத்துக்குச் சேவையாற்ற உதவியதற்கு நன்றி தெரிவித்தார். பவன் குமார் சாம்லிங்கின் தலைமையில், சிக்கிம் மாநிலத்தில் தாங்கள் வளர்ச்சிக்கான பாதை அமைத்திருப்பதாகக் கூறினார்.
பாஜக மட்டுமல்ல, முன்னாள் கால்பந்து வீரர் பெய்சுங் பூட்டியாவின் ஹம்ரோ சிக்கிம் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியும் சிக்கிம் மாநிலத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
.
.
**
மேலும் படிக்க
**
.
. **
[ராஜ்யசபா: அன்புமணியின் அடுத்த மூவ்!](https://minnambalam.com/k/2019/05/24/9)
**
.
**
[திமுக எம்.பி.க்களின் ரகசிய புலம்பல்!](https://minnambalam.com/k/2019/05/24/30)
**
.
**
[அமேதியில் ராகுல் வீழ்ந்த பின்னணி!](https://minnambalam.com/k/2019/05/24/33)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: ஆட்சியைக் கவிழ்க்க திமுக வியூகம்!](https://minnambalam.com/k/2019/05/23/167)
**
.
**
[மோடிகளை உருவாக்கும் மோடி](https://minnambalam.com/k/2019/04/11/19)
**
.
.
�,”