ஒரு ஹீரோ, இரண்டு பேய்கள், மூன்று கதாநாயகிகளுடன் கோடை விடுமுறைக்கு வெளியாகும் தேவி 2 படத்தின் டிரெய்லர் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.
2016ஆம் ஆண்டு ஏ.எல். விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடிப்பில் வெளியான தேவி நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமான தேவி 2 அதே கூட்டணியுடன் தயாராகியுள்ளது.
முதல் பாகத்தில் புதிதாக திருமணமான பிரபுதேவா, தமன்னா மும்பையில் குடியேற, தமன்னாவுக்கு பேய் பிடிப்பது போல கதையமைக்கப்பட்டது. தற்போது வெளியான இதன் இரண்டாம் பாகத்தின் டிரெய்லரைப் பார்க்கும் போது,பிரபுதேவாவிற்கு பேய் பிடிப்பது போல மாற்றியமைத்துள்ளனர். அதுவும் ஒரு பேயல்ல இரண்டு பேய்கள்.
காஞ்சனாவில் பேய்க்கு அடுத்த படியாக குழந்தைகளை ஈர்க்கும் கோவை சரளாவும் இப்படத்தில் நடித்திருக்கிறார். மேலும் நந்திதா ஸ்வேதா, டிம்பில் ஹயாதி என மேலும் இரண்டு நாயகிகளும் படத்தில் உள்ளனர்.
காஞ்சனா, அரண்மனை படங்களின் அடுத்தடுத்த பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து தேவி 2வும் அந்த வரிசையில் இணையுமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். வரும் மே 31ஆம் தேதி தேவி 2 வெளியாகவுள்ளது.
[தேவி2 டிரெய்லர்](https://www.youtube.com/watch?v=oC5GTqA-3_8)
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/27)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: கெஞ்சல், மிரட்டல்- கமல் வெளியிடாத ரகசியத் தகவல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/84)
**
.
**
[ரித்தீஷ் மனைவி மீது புகார்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/51)
**
.
**
[ரசிகர்களை ஏமாற்றிய மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/16/70)
**
.
**
[ரவீந்திரநாத் எம்பி: கல்வெட்டில் பெயர் மறைப்பு!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/56)
**
.
.
�,”