Pசந்தானம்: முன்ஜாமீன் கோரி மனு!

public

கட்டட காண்டிராக்டர் மற்றும் வழக்கறிஞரைத் தாக்கிய வழக்கில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார் நடிகர் சந்தானம்.

சந்தானம் வளசரவாக்கம், சௌத்ரி நகர் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் சண்முகசுந்தரம் என்பவரிடம் குன்றத்தூரை அடுத்த கோவூர், மூன்றாம் கட்டளை பகுதியில் கல்யாண மண்டபத்துடன் கூடிய அடுக்குமாடி கட்டடம் கட்ட ஒப்பந்தம் செய்துகொண்டதாகப் புகாரில் கூறப்பட்டுள்ளது. இதற்காக சந்தானம் தனது பங்களிப்பாக ஒரு பெரிய தொகையை சண்முகசுந்தரத்திடம் கொடுத்துள்ளார். பின்பு சில காரணங்களால் கட்டடம் கட்டும் முடிவை இருவரும் நிறுத்திவிட்டனர். இதையடுத்து சந்தானம் தான் கொடுத்த பணத்தை சண்முகசுந்தரத்திடம் திருப்பிக் கேட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அதுவே கைகலப்பாக மாறி ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதோடு [காவல் நிலையத்தில் புகார்](http://minnambalam.com/k/2017/10/10/1507619145) அளித்துள்ளனர்.

இந்த நிலையில், சந்தானம் கொடுத்த புகாரின்பேரில் காண்டிராக்டர் சண்முகசுந்தரம் மற்றும் வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் காண்டிராக்டர் கொடுத்த புகாரின்பேரில் சந்தானம் மீதும் கொலை மிரட்டல், ஆபாசமாகப் பேசியது, தாக்கியது என்று மூன்று பிரிவுகளில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரில் சந்தானத்தை கைது செய்வது குறித்து போலீஸ் உயரதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

இதனையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் சந்தானம் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *