16ஆவது மக்களவையைக் கலைக்க பாஜக அமைச்சரவைக் குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், விரைவில் குடியரசுத் தலைவரை சந்திக்கவுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
17ஆவது மக்களவையை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. நேற்று (மே 23) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் 303 தொகுதிகளை தனித்து வென்றுள்ளது பாரதிய ஜனதா கட்சி. இதனால் சில தினங்களில் மீண்டும் இரண்டாவது முறையாகப் பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ளார் மோடி. காங்கிரஸ் அல்லாத கட்சியைச் சேர்ந்த ஒருவர் இந்த நாட்டில் இரண்டாவது முறையாக தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைப்பது இதுவே முதல்முறை.
ஆட்சியமைப்பதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ள பாஜக தலைமை இன்று மாலை டெல்லியில் பாஜக அமைச்சர்களின் கூட்டத்தைக் கூட்டியது. அமைச்சர்கள் நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், சுஷ்மா ஸ்வராஜ், சுரேஷ் பிரபு உள்ளிட்ட அனைவரும் பங்கேற்றனர். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள அருண் ஜேட்லி மட்டும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஜுன் 3ஆம் தேதியோடு 16ஆவது மக்களவை காலாவதியாகவுள்ள நிலையில், இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் 16ஆவது அமைச்சரவையைக் கலைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து விரைவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சியமைக்க நரேந்திர மோடி உரிமை கோரவுள்ளதாக டெல்லி வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. பாஜக சார்பில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்பிக்கள் அனைவரும் 25, 26ஆம் தேதிகளில் டெல்லிக்கு வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பதவியேற்பு விழாவை மே 30ஆம் தேதி நடத்தத் திட்டமிட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.
மோடியின் செல்வாக்கை சர்வதேச அளவில் உயர்த்தும் நோக்கிலும், ஐநாவில் நிரந்த உறுப்பினராக இந்தியாவை இணைக்க ஆதரவு திரட்டும் முயற்சியாகவும் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்க பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரோன் மற்றும் சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதற்கு முன்னதாக வாரணாசிக்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க மோடி திட்டமிட்டுள்ளார். வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் ஷாலிணி யாதவை விட 4,75,754 வாக்குகளைக் கூடுதலாகப் பெற்று மோடி அத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
.
.
**
மேலும் படிக்க
**
.
.
**
[பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராவார்: தங்க தமிழ்ச்செல்வன்](https://minnambalam.com/k/2019/05/24/58)
**
.
**
[திமுக மக்களவைக் குழுத் தலைவர் யார்?](https://minnambalam.com/k/2019/05/24/63)
**
.
. **
[ராஜ்யசபா: அன்புமணியின் அடுத்த மூவ்!](https://minnambalam.com/k/2019/05/24/9)
**
.
**
[திமுக எம்.பி.க்களின் ரகசிய புலம்பல்!](https://minnambalam.com/k/2019/05/24/30)
**
.
**
[அமேதியில் ராகுல் வீழ்ந்த பின்னணி!](https://minnambalam.com/k/2019/05/24/33)
**
.
.�,”