pகிச்சன் கீர்த்தனா: பாசிப்பருப்பு சுண்டல்

Published On:

| By Balaji

நம் முன்னோர்கள் எதைச் செய்தாலும் அதன் பின்னணியில் மனிதனின் நன்மையைக் கருதி செய்யப்பட்டவையாக இருக்கின்றன. அப்படி முன்னோர்கள் வழிவகுத்து வைத்ததுதான் நவராத்திரி வழிபாடு முறை. ஒவ்வொரு நாளும் அம்பாளுக்கு ஒவ்வோர் அலங்காரம் செய்யப்படுவதோடு, ஒவ்வொரு தானியங்களால் ஆன நைவேத்தியம் வகைகளும் செய்து படைக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த பாசிப்பருப்பு சுண்டல் அனைத்து வயதினருக்கும் ஏற்றது.

**என்ன தேவை?**

பாசிப்பருப்பு – ஒரு கப்

பச்சை மிளகாய் – 2

இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன்

கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

**எப்படிச் செய்வது?**

பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுத்து, ஒரு மணி நேரம் ஊறவிடவும். பின் அதை மலர வேகவிடவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சித் துருவல், பெருங்காயத்தூள் தாளித்து, வேகவைத்த பருப்பு, உப்பு சேர்த்துக் கிளறவும். தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கினால், சுவையான பாசிப்பருப்பு சுண்டல் தயார்.

[நேற்றைய ரெசிப்பி: கறுப்பு உளுந்து சுண்டல்](https://minnambalam.com/k/2019/09/30/1)�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share