நாகர்ஜுனா நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தியில் நடிக்கவிருக்கிறார்.
தென்னிந்திய நடிகர்களில் ஒரு முன்னணி நடிகராக அறியப்படுபவர் நடிகர் நாகர்ஜுனா. தெலுங்கு நடிகரான இவர் தெலுங்கு மட்டுமில்லாது பிற மொழிப்படங்கள் பலவற்றிலும் நடித்து வருகிறார். அவ்வகையில் தற்போது இந்தித்திரை உலகில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் நாகர்ஜுனா. அயன் முகர்ஜி இயக்கும் இப்படத்துக்கு ‘பிரம்மாஸ்திரா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், அலியா பட், மவுனி ராய் ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்தில், முக்கிய வேடத்தில் நடிக்கிறார் நாகர்ஜுனா. சூப்பர் ஹீரோ ஃபேன்டஸி படமாக உருவாகும் இதை, தர்மா புரொடக்ஷன்ஸ் சார்பில் கரண் ஜோஹர் தயாரிக்கிறார். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் வெளியிடும் இந்தப் படம், அடுத்த வருடம் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின வெளியீடாக ரிலீஸாக இருக்கிறது.
சுமார் 15 வருடங்களுக்கு முன்பு அதாவது கடந்த 2003ஆம் ஆண்டு, ‘லாக் கார்கில்’ எனு இந்திப்படத்தில் நடித்திருந்தார் நாகர்ஜுனா. ஜே.பி.தத்தா தயாரித்து இயக்கியிருந்த இப்படத்தில்அஜய் தேவ்கன், சஞ்சய் தத், கரண் நாத், சுனில் ஷெட்டி, சஃயீப் அலி கான், ராணி முகர்ஜி, கரீனா கபூர், ஈஷா தியோல், ரவீனா டாண்டன் எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்தனர். அதன் பிறகு இப்போதுதான் இந்திப்படத்தில் நடிக்கிறார் நாகர்ஜுனா.�,