திமுக எம்பி கனிமொழி மீது முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று (மே 24) தடை விதித்துள்ளது
அதிமுக அரசின் ஊழல் முறைகேடுகளைக் கண்டித்து தமிழகத்தின் மாவட்ட தலைநகரங்களில் 2018 செப்டம்பர் 18ஆம் தேதி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது . சேலத்தில் ஸ்டாலின், கந்தன் சாவடியில் துரைமுருகன், திண்டிவனத்தில் கனிமொழி, சென்னையில் தயாநிதி மாறன், திருச்சியில் கே.என்.நேரு ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
”அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் பெருகி விட்டது. ஊழல் இல்லாத துறையே இல்லை என்ற அளவிற்கு அதிமுக ஆட்சி செய்து வருகிறது. ‘கரப்ஷன் கிங்’ என்று முதல்வர் பழனிசாமிக்கு பட்டம் வழங்கலாம்” என்று திண்டிவனத்தில் பேசிய கனிமொழி விமர்சித்திருந்தார்.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார்பில் கனிமொழி மீது விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அக்டோபர் மாதம் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜூன் 4ஆம் தேதி நேரில் ஆஜராகக் கனிமொழிக்குச் சம்மன் அனுப்பியுள்ளது. இந்நிலையில், விழுப்புரம் நீதிமன்ற சம்மனை ரத்து செய்யக் கோரியும், அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும் கனிமொழி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி ராஜமாணிக்கம், விழுப்புரம் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிப்பதாகவும், கனிமொழி ஆஜராக விலக்கு அளித்தும் உத்தரவிட்டார். மேலும், வழக்கு குறித்து தமிழக அரசு நான்கு வாரத்தில் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
.
.
**
மேலும் படிக்க
**
.
.
**
[பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராவார்: தங்க தமிழ்ச்செல்வன்](https://minnambalam.com/k/2019/05/24/58)
**
.
**
[திமுக மக்களவைக் குழுத் தலைவர் யார்?](https://minnambalam.com/k/2019/05/24/63)
**
.
. **
[ராஜ்யசபா: அன்புமணியின் அடுத்த மூவ்!](https://minnambalam.com/k/2019/05/24/9)
**
.
**
[திமுக எம்.பி.க்களின் ரகசிய புலம்பல்!](https://minnambalam.com/k/2019/05/24/30)
**
.
**
[அமேதியில் ராகுல் வீழ்ந்த பின்னணி!](https://minnambalam.com/k/2019/05/24/33)
**
.
.�,”