pஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு: கோவை நபர் கைது!

Published On:

| By Balaji

இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பிற்குக் காரணமான குற்றவாளிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், கோயம்புத்தூரில் 7 இடங்களில் நேற்று (ஜூன் 12) அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகிறது தேசியப் புலனாய்வு முகமை. இன்றும் இந்த சோதனை தொடர்ந்து வருகிறது.

உக்கடத்தில் அசாருதீன், போத்தனூரில் சதாம், அக்ரம், குனியமுத்தூரில் அபுபக்கர் ஆகியோரது வீடுகளிலும், அக்பர், இதியதுல்லாஹ், ஷகிம்ஷா ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடத்தியது தேசியப் புலனாய்வு முகமை. சோதனையின்போது 14 செல்போன்கள், 29 சிம் கார்டுகள், 10 பென்டிரைவ்கள், 6 மெமரி கார்டுகள், 4 ஹார்டு டிஸ்க், 3 லேப்டாப்கள், 300 துப்பாக்கிக் குண்டுகள் மற்றும் 1 இண்டர்நெட் டாங்கிள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள்.

32 வயதான முகமது அசாருதீன் இலங்கைக் குண்டு வெடிப்பிற்கு மூளையாகச் செயல்பட்ட ஜஹ்ரான் ஹாஷிமினின் ஃபேஸ்புக் நண்பர் எனத் தெரிய வந்திருக்கிறது. இவரை தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். “ஆள் சேர்க்கும் எண்ணத்தில், தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் கருத்துகளை அசாருதீன் அப்பாவி இளைஞர்களிடம் சமூகவலைதளம் மூலமாகப் பிரச்சாரம் செய்து வந்துள்ளார்” என்று தெரிவித்துள்ளனர் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள்.

சோதனைக்கு உட்படுத்தப்பட்ட அக்ரம் (26), இதியதுல்லாஹ் (38), அபுபக்கர் (29), சதாம் (26), ஷகிம்ஷா (28) ஆகியோரை, இன்று (ஜூன் 13) கோயம்புத்தூரில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளது தேசியப் புலனாய்வு முகமை.

**

மேலும் படிக்க

**

**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**

**[டிஜிட்டல் திண்ணை: விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல்- ஓ.பன்னீர் சூசகம்](https://minnambalam.com/k/2019/06/12/74)**

**[பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்](https://minnambalam.com/k/2019/06/12/20)**

**[சட்டமன்றக் கூட்டம்: எடப்பாடியின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/06/12/25)**

**[வாரிசுகள் தோல்வியடைந்த வரலாறு](https://minnambalam.com/k/2019/06/12/22)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share