pஇளையராஜாவுக்குக் கடன் பாக்கி வைத்த ரஜினி

public

இன்று தமிழ் திரைப்படத்துறையில் இருபெரும் ஜாம்பவான்களாக இருப்பவர்கள் ரஜினி மற்றும் கமல். இவர்கள் இன்றளவும் தங்களது பயணங்கள் தொடர்வதற்கு இசைஞானி இளையராஜாவும் ஒரு காரணமாக இருக்கிறார். காரணம் இன்றும் இவர்கள் நடித்த திரைப்படங்களின் பாடல்கள் மக்கள் மனதில் என்றும் நீங்காத இடம் பிடித்துள்ளது. இவ்விருவருக்கு மட்டுமில்லை அன்றிருந்த பல உச்ச நட்சத்திரங்களின் படங்களுக்கு இளையராஜாவின் இசை கூடுதல் பலமாக அமைந்திருந்தது. அதில் கமல், ரஜினிக்கு ஒரு தனித்துவமாக அமைந்தது. அந்த வகையில் இவர்கள் மூவரின் நட்பு திரைப்படம் தாண்டி இன்றளவும் நீடித்து வருகிறது.

இந்நிலையில் ரஜினிகாந்த் தனக்குக் கடன்பட்டுள்ளார் என்று இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார். இசைஞானி இளையராஜாவின் 74வது பிறந்த நாள் விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இளையராஜாவின் பிறந்தநாளுக்கு மும்பையில் இருந்து வாழ்த்து தெரிவித்த ரஜினியிடம், ‘எனக்கு நீங்கள் ஒரு டீ வாங்கிக் கொடுக்க வேண்டிய பாக்கி உள்ளது’ என இளையராஜா கூறியுள்ளார். இதைக் கேட்ட ரஜினி பத்து நிமிடங்கள் வரை சிரித்தார் என இளையராஜா தெரிவித்துள்ளார். மேலும் , தற்போது மும்பையில் காலா படப்பிடிப்பில் இருக்கும் ரஜினி, சென்னை வந்ததும் தனக்கு டீ வாங்கித் தருவதாக பதிலளித்ததாகவும் இளையராஜா தெரிவித்துள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *