இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 597 ஏடிஎம்கள் பயன்பாடு குறைந்துள்ளன.
இந்தியாவில் 2017ஆம் ஆண்டு இறுதியிலிருந்து தற்போது வரை 597 ஏடிஎம்கள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. BENCHMARKING INDIA’S PAYMENT SYSTEMS” என்ற தலைப்பில் ரிசர்வ் வங்கி நேற்று (ஜூன் 8) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2017ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் 2,22,300 ஏடிஎம்கள் இருந்தன. ஆனால், இது 2019ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி கணக்குப்படி நாடு முழுவதும் 2,21,703 ஏடிஎம்கள் மட்டுமே இயங்கி வருகின்றன’ என்று கூறப்பட்டுள்ளது.
எனினும் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது புதிய ஏடிஎம்கள் அமைப்பதில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது. அதாவது 2012 முதல் 2017 வரையில் இந்தியாவில் ஏடிஎம்கள் நிறுவுதல் ஆண்டுக்கு 14 சதவிகிதம் வளர்ச்சியைக் கண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், ‘2012ஆம் ஆண்டிலிருந்து 2017ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஏடிஎம்மைச் சார்ந்திருந்த மக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. 2012ஆம் ஆண்டில் ஒரு ஏடிஎம்மை சார்ந்திருந்தவர்களின் எண்ணிக்கை தோராயமாக 10,832ஆக இருந்தது. இது 2017ஆம் ஆண்டில் 5,919ஆகக் குறைந்துவிட்டது’ என்கிறது இந்த அறிக்கை.
ஏடிஎம்கள் பயன்பாடு குறைவதற்கு, சரியாகப் பணம் நிரப்பாததும், ஏடிஎம் இயந்திரத்தின் செயல்பாடுகளும் காரணமாகச் சொல்லப்படுகிறது. அதே வேளையில் இந்தியாவில் ஆன்லைன் மூலம் பணப் பரிவர்த்தனைகளை மக்கள் அதிகம் பயன்படுத்துவதால் ஏடிஎம்களின் செயல்பாடு குறைந்து வர முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
**
மேலும் படிக்க
**
**
[திமுக எம்பிக்கள் ஜாதகம்: அமித் ஷா உத்தரவு!](https://minnambalam.com/k/2019/06/08/23)
**
**
[டிஜிட்டல் திண்ணை: பன்னீருக்கு எதிராக எடப்பாடியின் வெளிப்படையான குரல்!](https://minnambalam.com/k/2019/06/08/73)
**
**
[நடிகர் சங்கத் தேர்தல்: பின்னணியில் அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/06/08/48)
**
**
[திமுக எம்.பி, எம்.எல்.ஏ.வுக்காக காத்திருந்த முதல்வர்!](https://minnambalam.com/k/2019/06/07/70)
**
**
[வாட்ஸ் அப்பில் கேள்வி: ஆள்வைத்து அடித்த அமமுக மா.செ!](https://minnambalam.com/k/2019/06/08/15)
**
�,”