ஆவின் பால் விநியோகம் செய்யும் டேங்கர் லாரிகளுக்கான டெண்டரை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (ஜூலை 13) உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஆவின் பால் விநியோகம் செய்வதற்காக 312 டேங்கர் லாரிகளை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சம்மேளனம் கடந்த ஜனவரி 7 அன்று டெண்டர் கோரியது. இந்த டெண்டரின் மதிப்பு 360 கோடி ரூபாயாகும். இந்த டெண்டரை எதிர்த்து தீபிகா டிரான்ஸ்போர்ட் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்த டெண்டரை இறுதி செய்யக் கூடாது என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மீறி டெண்டரை எடுக்க தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சம்மேளனம் முடிவு செய்தது. எனவே, இந்த டெண்டரை இறுதி செய்ய தடை விதிக்க வேண்டும் என்று ஸ்ரீதேவ் டிரான்ஸ்போர்ட்ஸ் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆகிய நிறுவனங்கள் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அதில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் டெண்டர் கோருவது தவறு என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் டெண்டர் அறிவிப்பு வெளியிட்டது சட்டவிரோதமானது என்று கூறி, அதை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் மூன்று ஆவின் பால் நிறுவனத்துக்கு விநியோகம் செய்தால்தான் டெண்டரில் பங்கேற்க முடியும் என்ற நிபந்தனையை நீதிபதி உறுதி செய்தார்.
**
மேலும் படிக்க
**
**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**
**[நிர்வாகிகள் விலகுவதை தடுக்க…சசிகலா போட்ட பட்ஜெட்!](https://minnambalam.com/k/2019/07/13/7)**
**[டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல். ஏ.க்களுக்கு லைஃப் செட்டில்மென்ட்- கூல் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/13/72)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[ மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?](https://minnambalam.com/k/2019/07/12/24)**
�,”