அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
சென்னை அயனாவரம் அடுக்குமாடிக் குடியிருப்பைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி, அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 14 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
“சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி சிறுமியை 7 மாதங்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாக, 17 பேரை சென்னை அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் கைது செய்து சிறையில் அடைத்தது. எங்களுக்கு எதிராக, 300 பக்க குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை ஊடகங்கள் பெரிதுபடுத்திவிட்டதாலும், மாநிலக் காவல் துறை அவசரஅவசரமாக விசாரணை நடத்துவதாலும் நியாயமான விசாரணை நடக்காது எனக் கூறி, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை இன்று (அக்டோபர் 31) நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு வந்தது. அப்போது, சிபிஐ விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கை மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி.�,