xஎஜமானர் இறந்தது தெரியாமல் காத்திருந்த நாய்!

Published On:

| By Balaji

சீனாவில் தன்னை வளர்த்த எஜமானர் இறந்தது தெரியாமல், அவர் வளர்த்து வந்த நாய் நான்கு நாட்களாகப் பாலம் ஒன்றில் காத்திருந்த வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போர் நெஞ்சை கலங்க வைத்துள்ளது.

சீனாவின் உகான் நகரின் யாங்சே பாலத்தில் இருக்கும் நதியில், நபர் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆற்றில் குதிக்க சென்ற அவருடன் அவருடைய செல்லப்பிராணியான நாயும் உடன் சென்றுள்ளது. தனது எஜமானர் தற்கொலை செய்துகொண்டது தெரியாமல் அந்த நாய் இப்போது அவரின் வருகைக்காக கடந்த நான்கு நாட்களாகப் பாலத்தின் நடைபாதையில் தனியாக காத்துக்கொண்டு இருந்துள்ளது.

இதை அந்த வழியே சென்ற சூ என்பவர் புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார். அவர் அந்த நாயை அழைத்துச் செல்ல விரும்பியுள்ளார். ஆனால் அந்த நாய் அவரிடம் சிக்காமல் ஓடியுள்ளது. பின்னர் மீண்டும் அந்தப் பாலத்தில் வந்து நின்றுள்ளது. மீண்டும் அதை வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோவைப் பார்த்த உகான் விலங்கு பாதுகாப்பு சங்கத்தின் இயக்குநர் டு பேன், உள்ளூர் தன்னார்வலர்களுடன் அதைத் தேடத் தொடங்கினார்.

தொடர்ந்த விசாரித்தபோது, “அன்றைய தினம் இது மிகவும் இருட்டாக இருந்ததால், கண்காணிப்பு கேமராவில் சரியாகப் பதிவாகவில்லை. ஆனால், அதில் ஒருவர் குதிப்பதைப் பார்க்க முடிந்தது. அவருடைய விசுவாசமான நாய் இங்கேயே இருப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது” என்கிறார்கள் அந்தப் பாலத்தைக் கண்காணிக்கும் அதிகாரிகள்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel