இருவருக்கும் சம மரியாதை: முனுசாமிக்கு கடலூர் மேடையின் பதில்!

Published On:

| By Balaji

“கூட்டுத் தலைமையை கவனமாக பயன்படுத்த வேண்டும்,. கூட்டுத் தலைமை என்பது கூர்மையான கத்தி. அதை கவனமாக பயன்படுத்த வேண்டும்,. அதேபோல ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவருக்கும் உரிய மரியாதையை சமமான முறையில் அளிக்க வேண்டும். அப்போதுதான் கட்சி இன்னும் பல வெற்றிகளைப் பெற முடியும்”

நேற்று (நவம்பர் 24) நடந்த அதிமுக பொதுக்குழுவில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளரான துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி பேசிய வார்த்தைகள்தான் அவை.

அதாவது ஆட்சி அளவிலும், கட்சி அளவிலும் ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்து புறக்கணிப்படுகிறார் அவருக்கான மரியாதை கொடுக்கப்படவில்லை என்பதுதான் கே.பி.முனுசாமியுடைய பேச்சின் சாரம். இதுபற்றி [எடப்பாடிக்காக தங்கமணி…. ஓ.பன்னீருக்காக முனுசாமி: பொதுக்குழுவில் வெடித்த பகிரங்க மோதல்](https://minnambalam.com/k/2019/11/24/108/admk-jeneral-body-meeting-ops-eps-clash-via-thangamani-munusamy) என்ற தலைப்பில் நேற்று மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியில் விரிவாகப் பதிவு செய்திருந்தோம்.

.

பொதுக்குழுவில் கே.பி.முனுசாமி பேசிய பேச்சின் ஈரம் காய்வதற்குள் அதற்கு உடனடி பதில் இன்று (நவம்பர் 25) கடலூர் அரசு விழாவில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ராமசாமிப் படையாச்சியார் மணிமண்டபத்தை இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடலூரில் திறந்து வைத்தார். அந்த விழாவுக்காக கடலூரில் இருக்கும் ஓ.பன்னீரின் ஆதரவாளர்கள் முன்னதாகவே விழாவுக்கு சென்றுவிட்டார்கள். அவர்களுக்கு அதிர்ச்சியே காத்திருந்தது.

“முதல்வரும், துணை முதல்வரும் இந்த அரசுக்கு மிகவும் முக்கியமானவர்கள். இருவருமே விழாவுக்கு வந்திருக்கிறார்கள். ஆனால் இன்று நடந்த அரசு விழா மேடையின் பின்னணியில் ஜெயலலிதா படமும், எடப்பாடி பழனிசாமி படமும்தான் இடம்பெற்றிருக்கிறதே தவிர, துணை முதல்வரான ஓ.பன்னீரின் படம் இடம்பெறவில்லை. நேற்று முனுசாமி அண்ணன் அவ்வளவு பேசியும் ஓ.பன்னீருக்கு இவ்வளவுதான் மரியாதை. இதுதான் அதிமுக” என்று குறிப்பிட்டனர்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share