Jரிலாக்ஸ் டைம்: வெங்காய சூப்!
நம் வீட்டில் தினம்தோறும் சமையலுக்குப் பயன்படுத்தும் பொருள் வெங்காயம். சமையலின் ருசியை கூடுதலாக்கவே இந்த வெங்காயத்தை பயன்படுத்துகிறோம் என்றுதான் நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் வெங்காயத்தில் உள்ள சத்துகள் நம் உடலுக்கு அவசியம் தேவை. குறிப்பாக தற்போதைய சூழ்நிலையில் இந்த வெங்காய சூப், நோய் எதிர்ப்பு சக்தி மிக மிக அவசியமானது.
**எப்படிச் செய்வது?**
வாணலியில் வெண்ணெய் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் நான்கு, பூண்டுப் பற்கள் நான்கு, பச்சை மிளகாய் இரண்டு சேர்த்து வதக்கவும். இதில், மூன்று கப் நீர் விட்டு நசுக்கிய பட்டை, கிராம்பு, சோம்பு எல்லாமாகச் சேர்ந்த மசாலா ஒரு டேபிள்ஸ்பூன், தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவிடவும். வெந்ததும் சிறிது ஆறவிட்டு, மிக்ஸியில் அரைத்து வடிகட்டி, ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள், ஒரு டேபிள்ஸ்பூன் நீரில் நன்கு கரைத்த சோளமாவு சேர்த்து அடுப்பில் வைக்கவும். ஒரு கொதிவர ஆரம்பிக்கும்போது, அரை கப் தேங்காய்ப்பாலை ஊற்றி, கொதிக்கவிட்டு சிறிதளவு நறுக்கிய மல்லித்தழையைத் தூவி இறக்கி பரிமாறவும்
**சிறப்பு**
இந்த சூப்பில் வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். புற்றுநோயைத் தடுக்கும். இதில் உள்ள குரோமியம், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.�,