தமிழக அரசின் 2,000 ரூபாய் சிறப்பு நிதியுதவித் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு 25 சதவிகிதம் கூடுதலாகச் சிறப்பு நிதி உதவி வழங்கக் கோரிய மனு தொடர்பாக நான்கு வாரங்களில் பதிலளிக்க வேண்டுமென்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
தமிழகத்தில் ஏழை மக்களுக்கு 2,000 ரூபாய் சிறப்பு நிதியுதவி வழங்கும் திட்டம் தொடர்பாகத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. “மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டத்தில், அரசு எந்த திட்டம் அல்லது சிறப்புத் திட்டங்களை அறிவித்தாலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 25 சதவிகிதம் அதிகம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், தமிழக அரசின் சிறப்பு நிதியுதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 2,000 ரூபாயை மாற்றுத் திறனாளிகளுக்கு 2,500 ரூபாயாக அதிகரித்து வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் நம்பிராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இன்று (மார்ச் 12) இந்த மனு தொடர்பாக விசாரணை மேற்கொண்டார் நீதிபதி ரவிச்சந்திரபாபு. அப்போது, இது குறித்துத் தமிழக அரசு நான்கு வாரங்களில் பதிலளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளிவைத்தார்.�,