oமுத்தலாக் சட்டம்: மூன்று வழக்குகள் பதிவு!

public

முத்தலாக் தடை சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, கடந்த ஆகஸ்டு 1 ஆம் தேதி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு நடைமுறைக்கு வந்தது.

இந்நிலையில் அடுத்த நாளான நேற்று (ஆகஸ்ட் 2) நாட்டில் மூன்று முஸ்லிம் ஆண்கள் மீது முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பை நகரில் விக்ரோலி பகுதியைச் சேர்ந்த இம்தியாஸ் தன் மனைவிக்கு வாட்ஸ் அப்பில் முத்தலாக் அனுப்பியுள்ளார். அவர் மீதும், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மும்பை விக்ரோலி பகுதியைச் சேர்ந்த ஜென்னத் பட்டேல் என்ற பெண் தனது கணவர் இம்தியாஸ் குலாம் பட்டேல் என்பவருக்கு எதிராக புகார் கொடுத்தார். தனக்கு வாட்ஸ் அப் மூலம் முத்தலாக் கொடுத்துவிட்டு இன்னொரு பெண்ணை குலாம் திருமணம் செய்துகொண்டார் என்று அந்தப் புகாரில் கூறியிருந்தார். இந்த சம்பவம் கடந்த நவம்பர் மாதம் நடந்திருந்தாலும் அந்த பெண் இப்போதுதான் காவல் நிலையம் வந்து புகார் கொடுத்ததாக அந்த காவல்நிலையத்தின் இன்ஸ்பெக்டர் மதுகர் கட் தெரிவித்துள்ளார்.

“இம்தியாசை நான் 2015 இல் திருமணம் செய்துகொண்டேன். அவரது அம்மாவும், சகோதரியும் என்னை வரதட்சணை கேட்டு கடந்த மூன்று வருடமாக சித்ரவதை செய்தனர். இந்த நிலையில்தான் இம்தியாஸ் என்னை போன் அழைப்பு மூலமும், வாட்ஸ் அப் மூலமும் முத்தலாக் செய்தார்” என்று புகாரில் கூறியிருக்கிறார் ஜென்னத் பட்டேல். இதன் அடிப்படையில் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் மட்டுமல்லாமல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்த பிரிவுகளிலும் இம்தியாஸ், அம்மா, சகோதரி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல ஹரியானா மாநிலத்தில் நுஹ் மாவட்டத்தைச் சேர்ந்த இக்ராம் என்பவர் மீது அவரது மனைவி ஜுமிரட் புகார் கொடுத்திருந்தார். ‘இரு வருடம் முன்பு திருமணம் செய்துகொண்ட என்னிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு மதுராவில் இருக்கும் எங்கள் உறவினர்களை இக்ரம் தொந்தரவுகொடுத்தார்” என நுஹ் போலீஸிடம் முன்பே புகார் கொடுத்துவிட்டு, ஜுமிரட் தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதையடுத்து அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு இருவரும் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். பலமுறை கவுன்சிலிங் கொடுத்தும் சரிப்பட்டு வரவில்லை.

போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்தவுடனேயே ஜுமிரட் டை பார்த்து முத்தலாக் சொல்லிவிட்டார் இக்ரம். இதையடுத்து ஜூலை 30 ஆம் தேதி மீண்டும் ஜுமிரட் போலீசை நாடினார். அதையடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்கிறார் சப் இன்ஸ்பெக்டர் ருச்சி தியாகி.

முத்தலாக் தடை சட்டத்தில் மூன்றாவது வழக்கும் ஹரியானா மாநிலத்தில் அதே நுஹ் மாவட்டத்தில் 23 வயதான சலாவூதின் தன் மனைவியிடம் போனில் தலாக் சொன்னதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: நீ காலை… நான் மாலை… திமுக -அதிமுக கரன்சி ஒப்பந்தம்!](https://minnambalam.com/k/2019/08/02/75)**

**[வானம் கொட்டட்டும்: மணிரத்னம் சர்ப்ரைஸ் விசிட்!](https://minnambalam.com/k/2019/08/02/3)**

**[சித்தார்த்தா ஏன் வெளிநாடு தப்பிச் செல்லவில்லை?](https://minnambalam.com/k/2019/08/02/51)**

**[சென்னையில் தொழிலதிபர் தற்கொலை!](https://minnambalam.com/k/2019/08/02/72)**

**[பிக் பாஸ்: சாக்ஷி கோர்ட்டில் கவின் மட்டுமா அக்யுஸ்டு?](https://minnambalam.com/k/2019/08/02/27)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *