oமுடிவை தள்ளிப்போடுவது சரியல்ல : கி.வீரமணி

public

[

தமிழக சட்டசபையைக் கூட்டி, யாருக்கு மெஜாரிட்டி என்பதை நிரூபிக்க கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவையில் கி.வீரமணி தெரிவித்தார்.

திராவிடர் கழகம் சார்பில் கோவை குனியமுத்தூரில் இன்று மாலை பெரியார் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று கோவைக்கு வந்தபோது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ‘தமிழகத்தில் தற்போது நிலவிவரும் அரசியல் நிலை மகிழ்ச்சிக்குரியதாக இல்லை. முதல்வரின் ராஜினாமாவை கவர்னர் ஏற்றுகொண்டுவிட்டார். இதனால் மெஜாரிட்டி யாருக்கு என்பதை நிரூபிக்கும்வகையில் சட்டசபையைக் கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதைச் செய்யாமல் கவர்னர் காலதாமதம் செய்யக்கூடாது.

முதல்வர் பன்னீர்செல்வம் தன்னை கட்டாயப்படுத்தியதால் ராஜினாமா செய்ததாகக் கூறியுள்ளார். இதுபற்றி கவர்னர் தனியாக விசாரணை நடத்த வேண்டும். பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்பினர் தமிழக அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி 356வது சட்டப் பிரிவை பயன்படுத்த முயற்சி செய்கிறார்கள். கவர்னர், தனது முடிவை தாமதப்படுத்திக்கொண்டே சென்றால் குழப்பங்கள்தான் அதிகரிக்கும். கவர்னர் மவுனமாக இருப்பது ஜனநாயக விரோதம் ஆகும்.

சசிகலாவுக்கு சொத்துக் குவிப்பு தீர்ப்பு தேதி இன்னும் அறிவிக்கப்படாதநிலையில், கவர்னர் முடிவைத் தள்ளிப்போடுவது சரியல்ல. மத்திய அரசு தற்போதைய பிரச்னையை கண்டுகொள்ளாமல் தமிழகத்தை காவிமயமாக்க முயற்சி செய்கிறது’ என்று அவர் கூறினார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *