ஒகி புயல் தொடர்பாக கடந்த வாரம் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு விசிட் அடித்து பல்வேறு பகுதிகளைப் பார்வையிட்டுச் சென்ற பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்… டெல்லியில் தனது சக துறை அமைச்சர்களை சந்தித்து வருகிறார்.
ஒகி புயலால் காணாமல் போன மீனவர்களைக் கண்டுபிடிக்க மத்திய அரசு மெத்தனம் காட்டுவதாக குமரியில் மீனவர்கள் பெரும் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் நேற்று நிர்மலா சீதாராமன் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து மீனவர்களை மீட்பதில் நவீன சாதனங்களைப் பயன்படுத்துவது பற்றி பேசினார்.
முன்னதாக மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்த நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு, கேரளா இரு மாநிலங்களுக்கும் தேவையான மத்திய அரசின் நிதி உதவியைப் பெறுவது பற்றி ஆலோசனை நடத்தினார்.
இன்று தமிழகத்தை சேர்ந்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையையும்,. கேரளத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அல்போன்ஸையும் சந்தித்த நிர்மலா சீதாராமன்… ‘மீட்புப் பணிகளின் தற்போதைய நிலைமை,. மீனவர்களின் போராட்டம் பற்றி விவாதித்திருக்கிறார்.
இந்த சந்திப்புகளுக்குப் பின் நிர்மலா சீதாராமன் மீண்டும் குமரிக்கு செல்வார் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.�,