புதுச்சேரியில் மின் கட்டணம் உயர்வைக் கண்டித்து பாஜகவினர் இன்று (மே 27) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களுக்கான மின் கட்டணத்தை நிர்ணயம் செய்ய மத்திய இணை ஒழுங்குமுறை மின்சார ஆணையம் என்ற அமைப்பு உள்ளது. இந்த அமைப்பு சமீபத்தில் புதுச்சேரி மாநிலத்துக்கு மின் கட்டணத்தை உயர்த்தியது. இந்த கட்டண உயர்வு ஜூன் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.
இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் பரிந்துரைப்படி 4.59 சதவீதம் வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, வீட்டு உபயோக பயன்பாட்டுக்கு தற்போது ரூ. 40 நிரந்தர கட்டணத்துடன் 100 யூனிட் வரை 1 யூனிட்டுக்கு ரூ. 1.30 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது, யூனிட்டுக்கு ரூ. 1.50 ஆக உயர்த்தப்படுகிறது.
101 முதல் 200 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ. 2.25ல் இருந்து ரூ. 2.50 ஆகவும், 201 முதல் 300 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.3.95ல் இருந்து ரூ.4.35 ஆகவும், 300 யூனிட்டுக்கு மேல் யூனிட்டுக்கு ரூ.5.10ல் இருந்து ரூ.5.60 ஆகவும் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக பயன்பாட்டுக்கு நிரந்தர கட்டணம் ரூ.120 ஆகும். இதனை சேர்த்து 100 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.5.15ல் இருந்து ரூ.5.50 ஆகவும், 101 முதல் 250 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.6.15ல் இருந்து ரூ.6.50 ஆகவும், 250 யூனிட்டுக்கு மேல் யூனிட்டுக்கு ரூ.6.85ல் இருந்து ரூ.7.20 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
குடிசைத்தொழில் பயன்பாட்டுக்கு ரூ.40 நிரந்தர கட்டணத்துடன் 100 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.1.30ல் இருந்து ரூ.1.50 ஆகவும், 101 முதல் 200 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.2.25ல் இருந்து ரூ.2.50 ஆகவும், 201 முதல் 300 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.3.95ல் இருந்து ரூ.4.35 ஆகவும், 300 யூனிட்டுக்கு மேல் யூனிட்டுக்கு ரூ.5.10ல் இருந்து ரூ.5.60 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒரு சில தினங்களிலேயே கட்டணம் உயர்த்தப்பட்டது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. எனினும் மின் கட்டணம் உயர்வு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கட்டண உயர்வைக் கண்டித்து புதுச்சேரியில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், உப்பளம் தலைமை மின்துறை அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த போராட்டத்தில், மிக்சி, சலவை இயந்திரம் ஆகிய மின்சாதன பொருட்களை உடைத்து, எதிர்ப்பை தெரிவித்தனர்.
மின் கட்டண உயர்வால் வணிகர்கள், தொழிற்சாலைகள் பாதிக்கப்படும் சூழல் எழுந்துள்ளதால், மின் கட்டண உயர்வு அறிவிப்பை திரும்ப பெறவேண்டும் என்று வலியுறுத்தினர்.
.
.
**
மேலும் படிக்க
**
.
.
**
[ரயில்வே இணையமைச்சர் ஆகிறார் ரவீந்திரநாத்?](https://minnambalam.com/k/2019/05/26/55)
**
.
**
[அதிமுகவில் ராஜ்யசபா ரேஸ்!](https://minnambalam.com/k/2019/05/26/52)
**
.
**
[இடைத்தேர்தல் தோல்வி: நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை](https://minnambalam.com/k/2019/05/26/32)
**
.
**
[திருநாவுக்கரசர் மீது திமுக அதிருப்தி!](https://minnambalam.com/k/2019/05/26/41)
**
.
**
[வாக்குகளை வழிப்பறி செய்துள்ளது திமுக அணி: ராமதாஸ்](https://minnambalam.com/k/2019/05/26/35)
**
.
.�,”