X
பிரியா வாரியர் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள ஒரு அடார் லவ் படம் நேற்று (பிப்ரவரி 14) வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது.
எதிர்பாராதவிதமாக ஒரே நாளில் புகழின் உச்சத்தை அடைவது டிஜிட்டல் உலகில் சாதாரணமாக நடைபெறும் நிகழ்வாக மாறிவிட்டது. ஒரு கண் சிமிட்டலுக்கு இந்தியா முழுவதும் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது பிரியா வாரியர் கனவிலும் எதிர்பார்க்காதது. ஒரு ஆண்டுக்கும் மேலாக அந்தப் படம் எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு விடையாக நேற்றைய தினம் வெளியாகியுள்ளது. எதிர்பார்த்த வெற்றியைப் படம் பெற்றுள்ளதா என்பது ஞாயிறு அன்று தெரிந்துவிடும்.
படத்தின் வெற்றி, தோல்வி பிரியா வாரியருக்கு கிடைத்த புகழ் வெளிச்சத்தைக் குறைத்துவிடாது. இந்தப் படத்தில் அவருடன் இணைந்து நடித்த ரோஷனை பிரியா வாரியர் உண்மையிலேயே காதலிக்கிறாரா என்ற பேச்சும் மலையாளத் திரைத்துறை வட்டாரங்களில் பேசப்பட்டன. சமீபத்தில் அவர் தனது கனவு நாயகன் எப்படி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். “துல்கர் சல்மான் போன்று உடல் அமைப்பும், பகத் ஃபாஸிலின் புன்னகையும், டோவினோ தாமஸின் முடி அழகும் கலந்து என் கனவு நாயகன் இருக்க வேண்டும்” என்று பிரியா வாரியர் தெரிவித்துள்ளார்.
பிரியா வாரியர் பாலிவுட்டில் தற்போது ஸ்ரீதேவி பங்களா படத்தின் மூலம் அறிமுகமாகிறார். சமீபத்தில் வெளியான இதன் டிரெய்லரில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியை நினைவுபடுத்தும் விதமாகக் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.�,