Oதொடரும் த்ரிஷாவின் இளம் ஜோடி!

Published On:

| By Balaji

திரைத்துறையில் கடந்த 15 ஆண்டுகள் கதாநாயகியாக கோலோச்சிக்கொண்டிருப்பவர் நடிகை த்ரிஷா. முன்னணி கதாநாயகர்களான கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் ஆகிய நடிகர்களோடு நடித்தவர் அவர்.

நடிகைகளை பொறுத்தவரை பொதுவாக இளம் கதாநாயகர்களோடு நடித்து பின் படிப்படியாக முன்னணி கதாநாயகர்களோடு நடிக்க ஒப்பந்தம் ஆவார்கள். த்ரிஷாவோ முன்னணி கதாநாயகர்களோடு நடித்துவிட்டு சமீப காலங்களில் மீண்டும் இளம் கதாநாயகர்களோடு கரம் கோர்த்து என்றும் இளம் நடிகையாக வலம் வருகிறார்.

அரண்மனை படத்தில் சித்தார்த்துடன் ஜோடி சேர்ந்தது பின் பூலோகம் படத்தில் ஜெயம் ரவியுடன் சேர்ந்து நடித்தது சமீபத்திய உதாரணங்கள். தற்போது அவர் 96 படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கவுள்ளார். இன்னும் ஐந்து வருடங்களுக்கு த்ரிஷா கோலிவுட்டில் வெற்றிகரமான கதாநாயகியாக வலம் வருவார் என்றே பேசப்படுகிறது.

96 படத்தின் பூஜையானது காதலர் தினத்தை முன்னிட்டு இன்று மாலை 7 மணிக்கு நடைபெறவுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel