oதீபாவளி: தொடர்ந்து இயங்கும் ரேஷன் கடைகள்!

Published On:

| By Balaji

தீபாவளிக்கு அத்தியாவசியப் பொருட்களை வாங்கிடும் வகையில், நாளை முதல் 4 நாட்களுக்கு நியாயவிலைக் கடைகள் திறந்திருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து உணவுப்பொருள் வழங்கல் துறை செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் 2ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை 4 நாட்கள் தொடர்ந்து அனைத்து நியாயவிலைக் கடைகளும் வழக்கம் போல் செயல்பட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியாய விலைக் கடைகளுக்கு, மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையானது வழக்கமான விடுமுறை நாளாகும். இதற்கு மாறாக, வருகிற நவம்பர் 2ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, அரசு விடுமுறை அளித்துள்ள திங்கள்கிழமையன்றும் நியாயவிலைக் கடைகள் இயங்கும்.

இதற்கு மாற்றாக, மூன்றாவது வெள்ளிக்கிழமையான நவம்பர் 16ஆம் தேதியன்று நியாயவிலைக் கடைகளுக்கு விடுமுறை நாளாகும் என்று அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share