Oதமிழக அமைச்சரவை அவசர கூட்டம்!

public

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் போராட்டம் வலுத்திருக்கும் நிலையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவரவேண்டுமென்று பிரதமரை, முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று காலை சந்தித்து பேசினார். ஆனால் மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட முடியாதென்று கூறிவிட்டநிலையில், முதல்வர் பன்னீர் செல்வம் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது, மிருகவதை தடை சட்டத்தின் கீழ் திருத்தம் கொண்டு வந்து, அவசர சட்டத்தை தமிழக அரசே பிறப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி அவசர சட்டவரைவு கொண்டு வந்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலம் ஜனாதிபதி ஒப்புதல் பெறப்படும். பின்னர் கவர்னரின் ஒப்புதலுடன் அவசர சட்டம் இயற்றப்படும். அவசர சட்டத்திற்கான சட்ட வரைவு தயாராக உள்ளது. அது தயார் செய்யப்பட்டு, தமிழக அரசு அதிகாரிகள் மூலம் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.. அவர்கள் ஜனாதிபதிக்கு அதனை அனுப்பி வைத்து, ஒப்புதல் கிடைத்ததும் ஓரிரு நாளில் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வரப்படும் என இன்று காலை டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்நிலையில் டெல்லியிலிருந்து தமிழகம் திரும்பும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் இன்று மாலை தமிழக அமைச்சரவையின் அவசர கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக அவசர சட்டம் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தமிழக அமைச்சரவை ஒப்புதலை பெற்றபின் தமிழக அரசின் முடிவாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் அனுமதியளித்தபின் ஓரிரு நாட்களில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0