Oசாதனைகளைத் தகர்த்த ரௌடி பேபி!

Published On:

| By Balaji

பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான மாரி 2 திரைப்படம் ரசிகர்களிடம் பெற்ற வரவேற்பைக் காட்டிலும் அதில் இடம் பெற்ற ரௌடி பேபி பாடல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஜனவரி 2ஆம் தேதி இப்பாடலை யூ டியூப் தளத்தில் பதிவேற்றியதிலிருந்து பார்வையாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவருகிறது. நாளுக்கு நாள் பல சாதனைகளைத் தகர்த்து தற்போது மூன்று மாதங்களில் 30 கோடிப் பார்வையாளர்களைக் கடந்து தென்னிந்தியாவிலேயே அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட பாடல் என்ற பெயரைப் பெற்றுள்ளது.

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான தனுஷின் கொலவெறி பாடல் அதிகம் பார்வையாளர்களைப் பெற்ற தமிழ்ப் பாடலாக இருந்தது. அந்த சாதனையை ரௌடி பேபி ஒரே மாதத்தில் தகர்த்தது. யூ டியூப் தவிர்த்து தொலைக்காட்சி சேனல்கள், பண்பலைகள், டிக் டாக் வீடியோக்கள் ஆகியவற்றிலும் ரௌடி பேபி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இப்பாடலில் தனுஷ், சாய் பல்லவியின் நடன அசைவுகளுடன், முக பாவங்களும் பெரிதும் கவனம் பெற்றுள்ளன. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். பிரபு தேவா நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார், டோவினோ தாமஸ், வரலட்சுமி, வித்யா பிரதீப், கிருஷ்ணா, குலசேகரன், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

[ரௌடி பேபி](https://www.youtube.com/watch?v=x6Q7c9RyMzk)�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share