Oசமையல் சிலிண்டர் விலை உயர்வு!

Published On:

| By Balaji

மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 2.94 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை நிலவரத்தைப் பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில் மானிய விலையில் வழங்கப்படும் சமையல் சிலிண்டரின் விலை ரூ.2.94 உயர்த்தப்பட்டு ரூ.505.34 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.502.40 ஆக இருந்தது. இந்த விவரத்தை இந்தியாவின் மிகப் பெரிய எரிபொருள் விநியோக நிறுவனமான இந்தியன் ஆயில் கார்பரேஷன் வெளியிட்டுள்ளது. இந்த விலை உயர்வு நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

இன்றைய விலை உயர்வையும் சேர்த்து, ஜூன் மாதத்திலிருந்து தொடர்ந்து ஆறாவது முறையாக சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரையில் சிலிண்டரின் விலை மொத்தமாக ரூ.14.13 உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரம் மானியமில்லா சிலிண்டரின் விலை ரூ.60 உயர்த்தப்பட்டு 880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 14.2 கிலோ எடை கொண்ட இந்த சமையல் சிலிண்டர்கள் ஆண்டு ஒன்றுக்கு 12 எண்ணிக்கையில் வழங்கப்படுகின்றன. சமையல் எரிவாயு சிலிண்டருக்கான அரசின் மானியம் மக்களின் வங்கிக் கணக்குகளிலேயே நேரடியாகச் செலுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share