Oசச்சினின் 10 உத்வேக முத்துகள்!

Published On:

| By Balaji

சச்சின் டெண்டுல்கர்… உலகப் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர். எந்த அறிமுகமும் தேவையில்லை. இப்பெயரை உச்சரித்தாலே உள்ளத்துக்குள் உத்வேகம் பொங்கும். வெவ்வேறு காலக்கட்டத்தில் வெவ்வேறு சூழலில் சச்சின் உதிர்த்த 10 முத்துகள் இதோ…

* “ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான தனித்துவ பாணியைக் கொண்டு, ஆடுகளத்திலும் வெளியேயும் தனக்கே உரிய பாதையில் தன்னை வெளிப்படுத்துவர்.”

* “வெவ்வேறு வீரர்களின் பங்களிப்பில் ஜெயிப்பது சாத்தியம் ஆவதால்தான் இந்த வெற்றி என்பதே மகத்துவம் ஆகிறது!”

* “என் முதல் காதலே கிரிக்கெட்தான் என்பதால் தோல்வியை வெறுப்பேன். என் வேறு உலகம் ஆன ஆடுகளத்தில் அடியெடுத்து வைத்தவுடனே வெற்றி ஒன்று மட்டுமே என் தாகமாக இருக்கும்.”

* “உங்கள் கனவுகளை துரத்துவதை நிறுத்தாதீர்கள். ஏனெனில், கனவுகள் மெய்ப்படும்.”

* “நீங்கள் பணிவானவராக இருந்தால், ஆட்டம் முடிந்த பின்னரும் உங்கள் மீது மக்கள் மதிப்பும் நேசமும் கொள்வர். ‘சச்சின் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர்’ என்பதை விட ‘சச்சின் ஒரு நல்ல மனிதர்’ என்று மக்கள் பேசுவதையே ஒரு பெற்றோர் என்ற முறையில் விரும்புகிறேன்.”

* ‘என்னை யாருடனும் ஒப்பிட ஒருபோதும் முற்பட்டது இல்லை.”

* “எப்படி வாழ்வது என்பதை என் தந்தையைப் பார்த்துதான் கற்றுக்கொண்டேன். அவரிடம் இருந்து பல விஷயங்களை உள்வாங்கிக் கொண்டேன். எந்தச் சூழலிலும் நிதானம் காப்பவர். அவர் கோபமடைந்து நான் பார்த்ததே இல்லை. என்னை அதுதான் மிகவும் ஈர்த்தது.”

* “உங்கள் மீது எவரேனும் கல்லெறிந்தால், அவற்றை மைல்கற்களாக மாற்றி திரும்ப வீசுங்கள்!”

* “நான் விரும்பும் பாதையில்தான் தொடர்ந்து பயணிக்க விரும்புகிறேன்.”

* “கிரிக்கெட் மீது கவனம் செலுத்த நேரம் ஒதுக்குவது போலவே என் வாழ்க்கையில் முக்கியம் என்பதை உணரும் வகையில் குடும்பத்துக்கும் சரியான நேரத்தை ஒதுக்க விரும்புகிறேன்.”�,”