oகேம் ஆஃப் த்ரோன்ஸ் 7 ஆவது சீசன் ட்ரெயிலர் !
கேம் ஆஃப் த்ரோன்ஸ் (Game of Thrones) தொடரின் ஏழாவது சீசனின் ட்ரெயிலர் வெளியானது.
தொடரின் முக்கிய கதாபாத்திரங்களான டெனெரிஸ், ஜான் ஸ்னோ, செர்செய் லானிஸ்டர் எல்லாம் ஒரு முக்கியமான நாற்காலியில் அமர்வது தான் ட்ரெயிலரின் காண்பிக்கப்படுகிறது. பின்புலத்தில் “சிட் டவுன்” எனும் விநோதமான பாடல் ஒன்று ஒலித்துக்கொண்டிருக்கிறது. அத்தனை பேரின் கண்களுடைய க்ளோஸ்-அப் காட்சிகளுடன் ட்ரெயிலர் நிறைவடைகிறது.இந்த ட்ரெயிலர் வீடியோ மொத்தம் 90 நொடிகள் ஓடுகிறது.கேம் ஆஃப் த்ரோன்ஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் ஜூலை 16 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவிருக்கிறது. இந்நிகழ்ச்சி அமெரிக்காவில் ஒளிபரப்பாகி ஒரு வார காலத்திற்கு பிறகு இந்தியாவில் ஒளிபரப்பாகிறது. இந்திய இளைஞர்களில் பெரும் பகதியினர் கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரசிகர்களாக இருக்கிறார்கள். 2010 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகும் இந்த தொடர் இதுவரை 38 எம்மி விருதுகளை வென்றிருக்கிறது.
[Game of Thrones Season 7](https://www.youtube.com/watch?v=JxWfvtnHtS0)�,