கோடையில் இதமளிக்கும் பானம்!
அக்னி நட்சத்திரம் போகட்டும் என்று, பல திருமணங்கள் காத்துக்கொண்டிருக்க… அக்னி நட்சத்திரத்தையும் பொருட்படுத்தாமல் அழைப்பிதழ்களை வைக்கும் விருந்தினர்களின் வருகை நம் இல்லங்களில் இருக்கத்தான் செய்யும். அப்படி வருகிறவர்களுக்கு இதமான விருந்தளிக்கும் இந்த மசாலா மோர்.
**என்ன தேவை?**
தயிர் – 500 மில்லி
கொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி அளவு
இஞ்சி – 2 அங்குல நீளத் துண்டு
பச்சை மிளகாய் – 1 அல்லது 2
தண்ணீர் – ஒரு லிட்டர்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
**எப்படிச் செய்வது?**
கொத்தமல்லி இலை, தோல் நீக்கிய இஞ்சி துண்டுகள், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும். தயிரில் தண்ணீர் விட்டு கடைந்து மோராக்கவும். இந்த மோரில், அரைத்த விழுதை சேர்த்துக் கலந்து 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு, வடிகட்டி எடுத்து பரிமாறவும்.
**என்ன பலன்?**
வெயிலுக்கு இதமளிக்கும் இந்த மோர், விருந்தினர்களை மகிழ்விப்பது மட்டுமல்ல; யாரும் வேண்டாம் என்று சொல்லக்கூடிய பானமும் இல்லை. இதை ஃப்ரிட்ஜில் வைத்தும் கொடுக்கலாம்.
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/27)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: கெஞ்சல், மிரட்டல்- கமல் வெளியிடாத ரகசியத் தகவல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/84)
**
.
**
[ரித்தீஷ் மனைவி மீது புகார்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/51)
**
.
**
[ரசிகர்களை ஏமாற்றிய மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/16/70)
**
.
**
[ரவீந்திரநாத் எம்பி: கல்வெட்டில் பெயர் மறைப்பு!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/56)
**
.
.
�,”