oகாவிரி நீர்: மேட்டூரில் அதிகாரிகள் ஆய்வு!

Published On:

| By Balaji

மேட்டூர் அணைக்கு நீர் வருவது மற்றும் அங்கிருந்து வெளியேற்றப்படுவது குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்டது காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழுவின் துணைக் குழு.

காவிரி நீர் பாயும் மாநிலங்களில் உள்ள நீர்த் தேக்கங்களில் நீர் வரத்து, வெளியேற்றம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தருமாறு உத்தரவிட்டிருந்தது காவிரி நதி நீர் ஒழுங்காற்றுக் குழு. காவிரி ஆற்றுப்படுகைகளில் தானியங்கி அளவீட்டு மானி பொருத்துமாறு அறிவுறுத்தியிருந்தது. இதனைச் செயல்படுத்தும் வகையில், ஜூன் 4, 5 ஆகிய தேதிகளில் கிருஷ்ணராஜ சாகர் அணையில் ஆய்வு மேற்கொண்டது காவிரி நதி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் துணைக் குழு. கண்காணிப்புப் பொறியாளர் மோகன் முரளி தலைமையில் இக்குழு செயல்படுகிறது.

நேற்று (ஜூன் 10) இக்குழு தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டுலு, தெப்பையாறு நீர்த்தேக்கப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டது. இதன்பின்னர் மேட்டூர் அணையின் வலது, இடது கரைகளில் ஆய்வு செய்தது. தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி, கேரளத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வரும் ஜூலை 31ஆம் தேதியன்று இது தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படவிருப்பதாகச் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் மோகன் முரளி.

“நாளை (இன்று) பவானிசாகர், அமராவதி அணைகளைப் பார்வையிடவுள்ளோம். தமிழகம், புதுச்சேரிக்கு இடைப்பட்ட காவிரி நதி பாயும் பகுதிகளில் மூன்று நாட்கள் ஆய்வு செய்யப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

நேற்றைய ஆய்வில் மேல் காவிரி வடிநில வட்ட கண்காணிப்புப் பொறியாளர் ஜெயகோபால், கிருஷ்ணராஜ சாகர் அணை கண்காணிப்புப் பொறியாளர் ராமேந்த்ரா, புதுச்சேரி பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளர் சுரேஷ், ஆழியாறு துணை இயக்குநர் ராஜ்குமார், இந்திய வானிலை ஆய்வு மைய அறிவியலாளர் அமுதா, மேட்டூர் பொதுப்பணித் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

**

மேலும் படிக்க

**

**

[கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி](https://minnambalam.com/k/2019/06/10/46)

**

**

[டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்கள் பலம்: அதிமுகவில் மோதிக்கொள்ளும் மா.செ.க்கள்!](https://minnambalam.com/k/2019/06/10/66)

**

**

[முகிலன் இருக்கிறார்!](https://minnambalam.com/k/2019/06/10/20)

**

**

[மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு](https://minnambalam.com/k/2019/06/09/52)

**

**

[செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!](https://minnambalam.com/k/2019/06/09/36)

**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share