2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ள நிலையில் பல்வேறு நிர்வாகிகளும், பொறுப்பாளர்களும் ராஜினாமா செய்து வருகின்றனர். நேற்று (மே 24) உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர் தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல் காந்தியிடம் சமர்ப்பித்தார். ஃபதேபூர் சிக்ரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக ராஜ் பப்பர் போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ராஜ்குமார் சாஹர் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
மே 23ஆம் தேதியன்று தேர்தல் முடிவுகள் வெளியானதும் ராஜ் பப்பர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தேர்தல் முடிவுகள் உத்தரப் பிரதேச காங்கிரஸிற்கு வேதனையளிக்கும் விதமாக உள்ளது. என்னுடைய பொறுப்புகளை நானே செய்யவில்லையோ என்ற குற்ற உணர்வு எனக்கு ஏற்பட்டுள்ளது. நான் காங்கிரஸ் தலைமையை சந்தித்து எனது கருத்துகளை தெரிவிப்பேன். மக்கள் நம்பிக்கையை பெற்ற அனைத்து வெற்றியாளர்களுக்கும் எனது வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
கர்நாடக காங்கிரஸின் பிரச்சாரக் குழு தலைவர் எச்.கே.பாட்டிலும் தனது ராஜினாமா கடிதத்தை ராகுல் காந்தியிடம் வழங்கியுள்ளார். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய பாட்டில், “நாங்கள் அனைவருமே சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நேரமிது. தோல்விக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டியது எனது கடமை. ஆகையால் நான் எனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளேன்” என்று தெரிவித்தார்.
ஒடிசா காங்கிரஸ் தலைவர் நிரஞ்சன் பட்நாயக்கும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து *ஏஎன்ஐ* செய்தி நிறுவனத்திடம் பேசிய நிரஞ்சன் பட்நாயக், “தேர்தலில் நானும் போட்டியிட்டேன். கட்சி எனக்கு ஒரு பொறுப்பை வழங்கியிருந்தது. தோல்விக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு பதவி விலகுகிறேன். நான் ராஜினாமா செய்வதாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடமும் தெரிவித்துவிட்டேன்” என்று கூறினார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாரம்பரிய காங்கிரஸ் தொகுதியான அமேதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி தோல்வியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். இதைத்தொடர்ந்து அமேதி மாவட்ட காங்கிரஸ் தலைவர் யோகேந்திர மிஸ்ரா தோல்விக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு ராஜினாமா செய்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது. ரெய் பரேலியில் போட்டியிட்ட சோனியா காந்தி வெற்றிபெற்றார். இதைத்தவிர வேறு எந்தத் தொகுதியிலும் காங்கிரஸ் வெற்றிபெறவில்லை. பாஜக-அப்னா தள கூட்டணி 64 தொகுதிகளில் வெற்றிபெற்றது. பகுஜன் சமாஜ்-சமாஜ்வாதி கூட்டணி 15 தொகுதிகளில் வெற்றிபெற்றது. ஒடிசா மாநிலத்திலும் ஒரு தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. கர்நாடகத்திலும் 28 மக்களவைத் தொகுதிகளில் ஊரக பெங்களூர் தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது.
.
.
**
மேலும் படிக்க
**
.
.
**
[ராஜ்யசபா: அன்புமணியின் அடுத்த மூவ்!](https://minnambalam.com/k/2019/05/24/9)
**
.
**
[பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராவார்: தங்க தமிழ்ச்செல்வன்](https://minnambalam.com/k/2019/05/24/58)
**
.
**
[திமுக எம்.பி.க்களின் ரகசிய புலம்பல்!](https://minnambalam.com/k/2019/05/24/30)
**
.
**
[அமேதியில் ராகுல் வீழ்ந்த பின்னணி!](https://minnambalam.com/k/2019/05/24/33)
**
.
**
[பலித்தது மின்னம்பலம் – மக்கள் மனம் – ஒரு சோறு பதம்!](https://minnambalam.com/k/2019/05/24/31)
**
.
.�,”