மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் கன்னடத் திரையுலகில் அறிமுகமாகவுள்ளார்.
ஒரு அடார் லவ் படத்தின் ஒரு பாடல் மூலம் ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலமானார் பிரியா வாரியர். பாடல் வெளியானதற்கும் படம் வெளியானதற்கும் இடையே சுமார் ஒரு வருட இடைவெளி உருவானது. பாடல் மூலம் கிடைத்த கவனம் மூலம் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி அதுவே படத்தின் வெற்றிக்கு தடை போட்டது. அதிகபட்ச எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை. நடிகர், நடிகையும் இயக்குநரும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக்கொண்டனர்.
அந்தப் படத்தைத் தொடர்ந்து பிரியா வாரியர் வேறெந்த படத்திலும் ஒப்பந்தமாகவில்லை. தற்போது கன்னடத் திரைப்படம் ஒன்றில் அவரை நடிக்கவைக்க முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன.
அறிமுக இயக்குநர் ரகு கோவி திருச்சூரில் உள்ள பிரியா வாரியரின் வீட்டில் அவரைச் சந்தித்து கதை கூறியுள்ளார். பிரியா வாரியருக்கு திரைக்கதை மிகவும் பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் அவர் இணைவது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
சமீபத்தில் தெலுங்கு திரைக்கதை ஒன்றைக் கேட்ட பிரியா வாரியர் திரைக்கதை பிடிக்கவில்லை என்பதால் அதை தவிர்த்துள்ளார்.
இந்த கன்னடப்படத்தில் அர்ஜுன் ஜன்யா இசையமைக்க, சத்யா ஹெக்டே ஒளிப்பதிவு செய்கிறார். ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அறிமுக நடிகர் அல்லது பிரபல நடிகர் ஒருவரின் மகனை கதாநாயகனாக நடிக்க வைக்கவுள்ளனர்.
.
.
**
மேலும் படிக்க
**
.
.
**
[டிஜிட்டல் திண்ணை: தோல்வி- தினகரனிடம் சசிகலா கேட்ட கேள்வி!](https://minnambalam.com/k/2019/05/28/80)
**
.
**
[துரைமுருகனுக்கு என்னாச்சு?](https://minnambalam.com/k/2019/05/29/59)
**
.
**
[நாங்குநேரியில் பீட்டர் அல்போன்ஸ்?](https://minnambalam.com/k/2019/05/29/56)
**
.
**
[96 ஜானுவும் இளையராஜாவின் புரிதலும்!](https://minnambalam.com/k/2019/05/29/26)
**
.
**
[இந்தியன் 2: ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பிய லைகா?](https://minnambalam.com/k/2019/05/29/22)
**
.
.
�,”