oகனரக வாகன ஓட்டுநர் கல்வித் தகுதி நீக்கம்?

Published On:

| By Balaji

கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான கல்வித் தகுதியை நீக்கம் செய்வது பற்றிப் பரிசீலித்து வருகிறது மத்தியப் போக்குவரத்து அமைச்சகம்.

பேருந்துகள், கனரக சரக்கு வாகனங்களை ஓட்டுவதற்கு எந்தவிதக் குறைந்தபட்ச கல்வித் தகுதியும் தேவையில்லை என்று முடிவு செய்துள்ளது மத்தியப் போக்குவரத்து அமைச்சகம். இதற்கு முன்பும், இதேபோன்ற முடிவை போக்குவரத்துத் துறை தெரிவித்திருந்தது. அப்போது, அதற்கு சட்ட அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில், தற்போது இம்முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

2016ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த 4.8 லட்சம் சாலை விபத்துகளில் 3.35 லட்சம் விபத்துகளில் தொடர்புடைய வாகன ஓட்டுநர்கள் 8ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. “கல்வியறிவு பெறாத ஓட்டுநர்களுக்கும் விபத்துகளுக்குமான தொடர்பு குறித்து எந்த தரவுகளும் இல்லை. அதனால் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன” என்று போக்குவரத்து அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்துப் பேசினார். அப்போது, பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த சில ஓட்டுநர்கள் உரிமம் பெற கல்வித் தகுதி தடையாக இருப்பது குறித்து கேள்வியெழுப்பினார்.

அதனால் சான்றிதழை வைத்து ஓட்டுநரின் கல்வித் தகுதியை முடிவு செய்ய இயலாது என்றும், கனரக வாகன ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் சாலை விதிகள், குறியீடுகளை வாசிக்க மற்றும் எழுதத் தெரிந்திருக்கிறதா என்பதை அறியவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது பற்றிய தனிப்பிரிவு விரைவில் மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்தில் சேர்க்கப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

**

மேலும் படிக்க

**

**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**

**[டிஜிட்டல் திண்ணை: விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல்- ஓ.பன்னீர் சூசகம்](https://minnambalam.com/k/2019/06/12/74)**

**[பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்](https://minnambalam.com/k/2019/06/12/20)**

**[சட்டமன்றக் கூட்டம்: எடப்பாடியின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/06/12/25)**

**[வாரிசுகள் தோல்வியடைந்த வரலாறு](https://minnambalam.com/k/2019/06/12/22)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share