Oஏற்றம் காணும் இறால் ஏற்றுமதி!

Published On:

| By Balaji

இந்த ஆண்டில் இந்தியாவின் இறால் ஏற்றுமதி கணிசமான அளவில் அதிகரிக்கும் என்று அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த *டிரிப் கேபிட்டல்* என்ற ஃபின்டெக் நிறுவனம் இந்தியாவின் இறால் ஏற்றுமதி குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ’எதிர்காலத்தைப் பார்த்தோமேயானால், இந்தியாவின் இறால் ஏற்றுமதி ஏற்ற இறக்கத்துடனேயே இருக்கும். ஒருபுறம், ஐரோப்பிய யூனியனில் அதிகரிக்கும் தேவையால் இந்தியாவுக்கான போட்டி அதிகமாக இருக்கும். மறுபுறம், அமெரிக்காவுக்கான இந்தியாவின் இறால் ஏற்றுமதி 15 முதல் 20 சதவிகிதம் வளர்ச்சி காணும் என்று ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவால் இந்தியாவின் பெரும்பாலான ஏற்றுமதியாளர்கள் குறைந்த அளவிலான தாக்கத்தையே சந்தித்துள்ளனர். ரூபாய் மதிப்பு சரிவு ஏற்றுமதியாளர்களுக்குச் சாதகமாகவே இருக்கும்.

எனினும் சர்வதேச இறால் சந்தையின் வர்த்தகத்தில் புதிதாக நுழைந்துள்ள நாடுகளால் இந்தியாவுக்கான போட்டி இன்னும் அதிகமாகவே இருக்கும். இப்போதைய சூழ்நிலையை வைத்துக்கொண்டு இந்தியாவின் எதிர்கால இறால் ஏற்றுமதி குறித்த சரியான நிலையைக் கூற இயலாது. தாய்லாந்து, வியட்நாம், ஈக்வடார், சீனா உள்ளிட்ட நாடுகள் வழங்கும் போட்டியில் ஐரோப்பிய யூனியனுக்கான இந்தியாவின் இறால் ஏற்றுமதியில் கடுமையான போட்டி இருக்கும். எனினும், இந்தியாவில் இறால் உற்பத்தியில் ஈடுபடும் முக்கிய மாநிலங்களான ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் இறால் விலை உயர்வு மற்றும், டாலர் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் இந்தியாவின் இறால் ஏற்றுமதி கணிசமான வளர்ச்சியைக் கொண்டிருக்கும்’ என்று கூறப்பட்டுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share