oஏர் இந்தியா: அந்நிய முதலீட்டுக்கு அனுமதி!

Published On:

| By Balaji

அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் அந்நிய நாட்டைச் சேர்ந்த விமான நிறுவனங்கள் 49 சதவிகிதம் வரையில் முதலீடு செய்வதற்கு அனுமதிப்பதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது.

பொதுத் துறை விமானப் போக்குவரத்துச் சேவை நிறுவனமான ஏர் இந்தியா, கடுமையான கடன் சுமையில் சிக்கியுள்ளதால் இந்நிறுவனத்தைத் தனியார் மயமாக்கும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஏர் இந்தியாவைக் கைப்பற்றும் முயற்சியில் தனியார் நிறுவனங்களின் போட்டியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடன் சுமையிலிருந்து மீள ஏர் இந்தியாவின் சொத்துகளில் ரூ.500 கோடி அளவுக்கு விற்பனை செய்ய கடந்த ஆகஸ்ட் மாதத்திலேயே மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. ஏர் இந்தியாவின் பங்குகளை வாங்க டாடா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஜெட் ஏர்வேஸ் ஆகிய நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஏர் இந்தியாவில் அந்நிய முதலீட்டுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஏர் இந்தியா விமானத்தில் அந்நிய நிறுவனங்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ 49 சதவிகிதம் வரையில் முதலீடு செய்யலாம் எனப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முன்னதாக இந்திய விமான நிலையங்களில் அந்நிய நிறுவனங்கள் 49 சதவிகிதம் வரையில் முதலீடு செய்ய அனுமதி இருக்கிறது. ஆனால், ஏர் இந்தியா நிறுவனத்துக்கு அதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 2017ஆம் ஆண்டின் இந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.48,876.81 கோடி கடன் உள்ளது. இதில் ரூ.17,359.77 கோடி ஏர் கிராஃப்ட் விமானங்கள் வாங்குவதற்காகப் பெற்ற கடனாகும்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment