எவரெஸ்ட் சிகரத்துக்குப் பயணம் மேற்கொண்ட 3 பேர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலையேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் ஏற்பட்ட நெரிசலே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் எவரெஸ்ட் சிகரத்துக்குப் பயணம் மேற்கொள்ளும் வழக்கம் தொடர்ந்து வருகிறது. அம்மாதங்களில் நிலவும் சூழலானது, மலையேறுபவர்களுக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. இந்த ஆண்டு மலையேறுவதற்கு விண்ணப்பித்தவர்களில் 381 பேருக்கு அனுமதி வழங்கியது நேபாள அரசு. நேற்று (மே 23) சுமார் 120 பேர் மலையுச்சிக்குச் செல்ல முயற்சித்தனர். அப்போது சிலருக்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டன.
இந்த நிலையில், நேற்று எவரெஸ்ட் சென்று திரும்பும் வழியில் 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 2 பேர் இந்தியர்கள். இதனை உறுதிப்படுத்தியுள்ளார் நேபாளத்தின் சுற்றுலாத் துறை செய்தித்தொடர்பாளர் மீரா ஆச்சார்யா. கல்பனா தாஸ் (52), நிகால் பாக்வான் (27) ஆகியோர் எவரெஸ்டில் இருந்து திரும்பும் வழியில் உயிரிழந்தனர். மலையிலிருந்து கீழிறங்கும் வழியில் நிகால் 12 மணி நேரத்துக்கும் மேலாக நெரிசலில் சிக்கிக்கொண்டதாகவும், அதனால் அவரது உயிரைக் காப்பாற்ற இயலவில்லை என்றும் அந்நாட்டு சுற்றுலாத் துறை ஊழியர்கள் தெரிவித்தனர். இதேபோல வடக்கு திபெத் வழியாக மலையுச்சிக்குச் சென்ற ஆஸ்திரியாவைச் சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவரும் நேற்று பலியானார்.
55 வயதான அஞ்சலி குல்கர்னி என்ற பெண்மணி, நேற்று முன்தினம் எவரெஸ்ட் பயணத்தின்போது பலியானார். கடந்த வாரம் ஒரு இந்தியர் எவரெஸ்ட் செல்லும் வழியில் பலியானார். அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு மலையேற்ற வீரர், எவரெஸ்ட் சிகரத்தின் அருகே பாறையில் இருந்து வழுக்கிக் கீழே விழுந்து உயிரிழந்தார். ஒவ்வொரு ஆண்டும் 5 முதல் 10 பேர் வரை எவரெஸ்ட் பயணத்தின்போது மரணமடைவதாகத் தெரிவித்தள்ளனர் நேபாள அதிகாரிகள்.
கடந்த ஆண்டு 807 பேர் எவரெஸ்ட் உச்சியை நோக்கிச் சென்றனர். இந்த ஆண்டு 750 பேர் வரை மலையேறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 150 பேருக்கு நேபாள அரசு அனுமதி வழங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
.
.
**
மேலும் படிக்க
**
.
.
**
[பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராவார்: தங்க தமிழ்ச்செல்வன்](https://minnambalam.com/k/2019/05/24/58)
**
.
**
[திமுக மக்களவைக் குழுத் தலைவர் யார்?](https://minnambalam.com/k/2019/05/24/63)
**
.
. **
[ராஜ்யசபா: அன்புமணியின் அடுத்த மூவ்!](https://minnambalam.com/k/2019/05/24/9)
**
.
**
[திமுக எம்.பி.க்களின் ரகசிய புலம்பல்!](https://minnambalam.com/k/2019/05/24/30)
**
.
**
[அமேதியில் ராகுல் வீழ்ந்த பின்னணி!](https://minnambalam.com/k/2019/05/24/33)
**
.
.�,”