oஉலகளாவிய பட்டியலில் 2 இந்தியப் பல்கலைகள்!

Published On:

| By Balaji

வேலைவாய்ப்புக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் உலகளாவிய பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முதல் 100 இடங்களில் 2 இந்தியப் பல்கலைக்கழகங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

உலகளாவிய பல்கலைக்கழகங்களில் வேலைவாய்ப்புக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் தகுதி குறித்த ஆய்வு, நேற்று(நவம்பர் 15) டைம்ஸ் ஹையர் எஜூகேசன் பதிப்பில் வெளியிடப்பட்டது. அதில், 2011ஆம் ஆண்டு முதல், மே மற்றும் செப்டம்பர் மாதங்களில் 2 கட்டங்களாக இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட 22 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

அதில், அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் முதல் 10 இடங்களில் 6 இடங்களையும், முதல் 150 இடங்களில் 34 இடங்களையும் பிடித்துள்ளன. முதல் 10 இடங்களில் இங்கிலாந்து பல்கலைக்கழகங்களும், உள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை பெங்களூரு ஐ.ஐ.எஸ்.சி., 28-வது இடத்தையும்,டெல்லி ஐஐடி 53-வது இடத்தையும் பிடித்துள்ளன. ஐஐஎம் மும்பை 144-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு டெல்லி ஐஐடி 145-வது இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share