உபேர் நிறுவனம் உலகின் 570 நகரங்களில் டாக்ஸி போக்குவரத்து சேவை வழங்கி வருகிறது. இந்நிறுவனம் ஓட்டுநர்களுக்கு ஊதியம் வழங்க ’பாதை சார்ந்த ஊதியமுறை’ திட்டத்தைப் புதிதாக அறிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களிடமிருந்து கட்டணமாகப் பெறும் தொகைக்கும் ஒட்டுநர்களுக்குக் கொடுக்கும் ஊதியத்துக்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு இருப்பதாக உபேர் நிறுவனத்தின் ஓட்டுநர்கள் முறையிட்டனர். இதையடுத்து புதிய ஊதியத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, அந்நிறுவனப் பிரதிநிதி ஒருவர் ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில், “இந்தப் புதிய ஊதியத் திட்டம் முதலில் சில நகரங்களில் சில மாதங்கள் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்படும். ஓட்டுநர்களுக்குக் கொடுக்கும் ஊதியத்துக்கும் வாடிக்கையாளர்களிடமிருந்து பெறும் தொகைக்கும் வேறுபாடு உள்ளது உண்மைதான். இந்த புதிய ஊதியத் திட்டம் ‘பாதை சார்ந்த ஊதியமுறை’ என்றழைக்கப்படும். இதுவரையில் எவ்வளவு தூரம் பயணம் சென்றனரோ அந்த அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது பழைய நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது தூரம், நேரம், பயணிகளின் எண்ணிக்கை மற்றும் பாதையைப் பொறுத்து தீர்மானித்தல் போன்றவை கடைப்பிடிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.�,