Oஇறைச்சிக் கடைகளை மூட உத்தரவு!

public

வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை (ஜனவரி 31) இறைச்சிக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

வள்ளலார் என்றழைக்கப்படும் ராமலிங்க அடிகள் 1823ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ஆம் தேதி பிறந்தார். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்னும் வாக்கியத்துக்குச் சொந்தக்காரர். அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு கொண்ட எளியவர்.கடந்த 1867ஆம் ஆண்டு, மே 23 ஆம் தேதி வடலூரில் தருமச்சாலை அமைத்து அன்னதானத்தைத் தொடங்கினார். இதற்காக அவர் ஏற்றி வைத்த அடுப்பு, தற்போது வரை அணையாமல் எரிந்துகொண்டிருக்கிறது. வடலூரில் அன்னதானம் செய்வதுதான் வள்ளலார் போதித்த முக்கியக் கொள்கையாக உள்ளது. எனவே அவரைப் போற்றும் விதமாக அவரது நினைவு தினத்தன்று அனைத்து இறைச்சிக் கூடங்களும் மூடப்படும்.

சென்னை, மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “வள்ளலார் நினைவு தினம், நாளை அனுசரிக்கப்படுகிறது. எனவே, ஆடு, மாடு, கோழிகளை வதை செய்வதும், இறைச்சிகளை விற்பனை செய்வதும் நாளை தடை செய்யப்படுகிறது. தமிழக அரசு உத்தரவின்படி பெருநகர சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத் துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இறைச்சிக் கடைகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சியை விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவைச் செயல்படுத்த அனைத்து வியாபாரிகளும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *