இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஒருநாள், டெஸ்ட் தொடர்களை வென்றது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இரண்டு டி20, ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடவிருக்கிறது.
டி20 கிரிக்கெட் தொடர் முதலில் நடைபெறவுள்ளது. முதல் போட்டி விசாகப்பட்டினத்தில் வருகிற 24ஆம் தேதியும், 2ஆவது போட்டி 27ஆம் தேதி பெங்களூருவிலும் நடைபெறுகிறது.
இதற்கான இந்திய அணி நேற்று (பிப்ரவரி 15) அறிவிக்கப்பட்டது. ரோஹித் ஷர்மா, ஷிகர் தவன் போன்ற முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாருக்கும் ஓய்வு கொடுக்கப்படவில்லை. நியூசிலாந்து தொடரில் இடம்பிடித்த புவனேஸ்வர் குமாருக்கு மட்டும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் தொடர் அணியிலிருந்து தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டுள்ளார். கடைசியாக ஆஸ்திரேலியா, நியூஸிலாந்தில் தினேஷ் கார்த்திக் விளையாடினார். ஒருநாள், டி20 இரண்டு அணிகளிலும் கே.எல்.ராகுல் திடீரெனச் சேர்க்கப்பட்டுள்ளார்.
வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் கடைசி 3 ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் இடம்பெற்றுள்ளார். அதே போல் டி20 தொடரில் குல்தீப் யாதவ் இடத்தில் அறிமுக வீரர் மயங்க் மார்க்கண்டே சேர்க்கப்பட்டுள்ளார்.
**கடைசி மூன்று போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்த வீரர்கள் விவரம்**
1. விராட் கோலி, 2. ரோஹித் ஷர்மா, 3. ஷிகர் தவன், 4. அம்பத்தி ராயுடு, 5. கேதர் ஜாதவ், 6. மகேந்திர சிங் தோனி, 7. ஹர்திக் பாண்டியா, 8. பும்ரா, 9. முகமது ஷமி, 10. சஹல், 11. குல்தீப் யாதவ், 12. விஜய் சங்கர், 13. ரிஷப் பந்த், 14. புவனேஸ்வர் குமார், 15. கேஎல் ராகுல்.
**முதல் இரண்டு போட்டிகளுக்கான அணி விவரம்**
1. விராட் கோலி, 2. ரோஹித் ஷர்மா, 3. தவன், 4. ராயுடு, 5. கேதர் ஜாதவ், 6. தோனி, 7. ஹர்திக் பாண்டியா, 8. பும்ரா, 9. முகமது ஷமி, 10. சஹல், 11. குல்தீப் யாதவ், 12. விஜய் சங்கர், 13. ரிஷப் பந்த், 14. சித்தார்த் கவுல், 15. கேஎல் ராகுல்.
**டி20 போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்த வீரர்கள் விவரம்**
1. கோலி, 2. சர்மா, 3. தவான், 4. ராயுடு, 5. கேதர் ஜாதவ், 6. தோனி, 7. ஹர்திக் பாண்டியா, 8. பும்ரா, 9. முகமது ஷமி, 10. சஹல், 11. குல்தீப் யாதவ், 12. விஜய் சங்கர், 13. ரிஷப் பந்த், 14. புவனேஸ்வர் குமார், 15. ராகுல்
�,