அஞ்சலி நடிக்கும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நிரோஷா நடிக்கவுள்ளார்.
80களின் இறுதியில் தமிழ்சினிமாவில் அறிமுகமாகி 90களின் பாதிவரை கதாநாயகியாக வலம் வந்தவர் நிரோஷா. தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய திரையுலகிலும் நடித்துவந்த நிரோஷா திருமணத்திற்குப்பின் நடிப்பிலிருந்து சற்று விலகியிருந்தார். அதன்பின் மீண்டும் 2000இல் ரீஎன்ட்ரி கொடுத்த அவர் தொலைக்காட்சி தொடர்களிலும் கவனம் செலுத்தினார்.
அவ்வப்போது தமிழ்த் திரையுலகில் தலைகாட்டிவரும் அவர் முக்கியமான கதாபாத்திரம் என்றால் நடிக்க சம்மதிக்கிறார். அந்தவகையில் சமீபத்தில் சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம், பொட்டு, 100 ஆகிய படங்களில் நடித்திருந்தார். தற்போது இவர் அஞ்சலி பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தில் இணைந்துள்ளார்.
சொன்னா புரியாது படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமான கிருஷ்ணன் ஜெயராஜ் இந்தப் படத்தை இயக்குகிறார்.
ஹாரர் – ஃபேண்டஸி ஜானரில் உருவாகும் இந்தப் படத்தில் அஞ்சலியை துரத்தி காதலிக்கும் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்கிறார். விஜய் டிவி ராமர் அவருடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடிக்கிறார்.
அஞ்சலி நடித்த பலூன் படத்தை இயக்கிய கே.எஸ்.சினீஷ் தனது சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனத்தின் மூலம் முதன்முறையாக தயாரிக்கிறார்.
அர்வி ஒளிப்பதிவு செய்ய விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். திலீப் சுப்புராயன் சண்டைக் காட்சிகளை வடிவமைக்கிறார்.
**
மேலும் படிக்க
**
**[அதிமுக தலைவராகிறாரா ரஜினி?](https://minnambalam.com/k/2019/07/15/18)**
**[திமுகவில் இணைந்த தேமுதிக மா.செ!](https://minnambalam.com/k/2019/07/14/48)**
**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**
**[ வேலுமணியா இப்படி? – எடப்பாடி ஆதங்கம்!](https://minnambalam.com/k/2019/07/14/27)**
**[எம்.எல்.ஏ புகார்: அமைச்சரை எச்சரித்த எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/14/46)**
�,”